என்ன வேணாலும் நடக்கலாம்...! இறுதிகட்ட ஆலோசனையில் தேர்தல் ஆணையம்..! 

First Published Dec 20, 2017, 7:40 PM IST
Highlights
District Election Officer Karthikeyan met with Tamil Nadu Chief Electoral Officer Rajesh Lakhani.


தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியுடன், மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் சந்திப்பில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து இறுதிக்கட்ட ஆலோசனை நடைபெற்று வருகிறது. 

ஆர்.கே.நகரில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பணியில் 1,860 அரசு ஊழியர்கள் ஈடுபட உள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்தல் பணிகள் இறுதிகட்டத்தை எட்டிய நிலையில் 90% வாக்கு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 288 வாக்குச்சாவடிகளில் 1,332 வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தபட உள்ளது. 

இதற்காக 15 கம்பெனி துணை ராணுவப்படை சென்னை வந்துள்ளது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், ஜெ.சிகிச்சை பெற்ற வீடியோவை டிடிவி ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டார். 

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீ வீடியோ எனவும் குற்றம் சாட்டப்பட்டுவருகின்றது. 

ஆனால் இந்த வீடியோ வெளியிட்டது தேர்தல் விதிமீறல் எனவும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதன்படி வெற்றிவேல் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஆர்.கே.நகர் தேர்தல் நடக்குமா நடக்காதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதைதொடர்ந்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியுடன், மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் சந்திப்பில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து இறுதிக்கட்ட ஆலோசனை நடைபெற்று வருகிறது. 


 

click me!