ஓபிசி பிரிவினருக்கு மருத்துவ படிப்பில் 27 சதவீத இட ஒதுக்கீடு.. மத்திய அரசு வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு.

Published : Jul 29, 2021, 04:29 PM ISTUpdated : Jul 29, 2021, 04:33 PM IST
ஓபிசி பிரிவினருக்கு மருத்துவ படிப்பில் 27 சதவீத இட ஒதுக்கீடு.. மத்திய அரசு வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு.

சுருக்கம்

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை பிரதமர் மோடி தலைமையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் மற்றும் முக்கிய துறை வல்லுனர்களுடம் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அவர் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது. 

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழக இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவேண்டுமென அதிமுக, திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றன. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும்  மத்திய, மாநில அரசுகள் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைத்து இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியது. 

அதே நேரத்தில் இந்த இட ஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது, அது தொடர்பான விசாரணையின் போது, இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இந்த ஆண்டே இட ஒதுக்கீடு வழங்குவதற்கான எந்த சாத்தியக் கூறுகளும் இல்லை என மத்திய அரசு பதில் மனு அளித்தது. இதனால் உயர்நீதி மன்றத்தில் திமுக சார்பில் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசு பதிலளிக்க 2 வார காலம் அவகாசம் வழக்கியது. 

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை பிரதமர் மோடி தலைமையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் மற்றும் முக்கிய துறை வல்லுனர்களுடம் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அவர் ஓபிசி இட ஒதுக்கீட் வழங்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. யு.ஜி மற்றும் பி.ஜி மருத்துவம் / பல் மருத்து படிப்புகள் (எம்.பி.பி.எஸ் / எம்.டி / எம்.எஸ் / டிப்ளோமா / பி.டி.எஸ் / எம்.டி.எஸ்) அகில இந்திய ஒதுக்கீட்டு திட்டத்தில் ஓ.பி.சி.க்களுக்கு 27% இட ஒதுக்கீடு மற்றும் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க அமைச்சகம் முடிவு எடுத்துள்ளதுதாகவும், இந்த கல்வி ஆண்டு 2021-22 முதல் இது நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த, ஓபிசி இட ஒதுக்கீடு மூலம் நாடு முழுவதும் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட இடங்கள் நிரப்பபடும், எம்பிபிஎஸ், எம்.டி., எம்.எஸ், பி.டி.எஸ், எம்.டி.எஸ், படிப்புகளில் 4,000 மாணவர்கள் இவ்வாண்டு கூடுதலாக பயன்பெறுவர், எம்பிபிஎஸ் படிப்பில் 1. 500 மாணவர்களும், முதுநிலை மருத்துவ படிப்பில் 2,500 மாணவர்கள் இதன் மூலம் பயன் பெறுவர். அதேபோல் பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய பிரிவினருக்கும் 10 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள் தானா? நிபந்தனையோடு இபிஎஸிடம் இறங்கி வந்த அமித் ஷா..!
பாஜகவை வைத்து தவெகவுக்கு ஸ்கெட்ச் போட்ட ஸ்டாலின்..! திமுகவை பேயடி அடித்த விஜய்..! சீக்ரெட் பின்னணி..!