3 மாத காலமாக தென்னாப்பிரிக்காவில் சிக்கித்தவித்த 26 இந்திய விஞ்ஞானிகள்..!! நாடு திரும்புகின்றனர்...?

By Ezhilarasan BabuFirst Published May 21, 2020, 1:40 PM IST
Highlights

அவர்கள்  அண்டார்டிகாவுக்கு பயணம் மேற்கொண்டு திரும்பியபோது கேப்டவுனில் சிக்கினார் ,  கடந்த மூன்று மாதங்களாக இங்கே இருந்து வருகின்றனர். நாடு திரும்ப உள்ள விமானத்தில் 26 விஞ்ஞானிகளுடன் 150 மாணவர்களும் பயணிக்க உள்ளனர். 

கொரோனா வைரஸ் முழுஅடைப்பு காரணமாக  தென்னாப்பிரிக்காவில் சிக்கிய 26 விஞ்ஞானிகள் , 150 மாணவர்கள் உட்பட சுமார் 200 பேர் நாளை இந்தியா திரும்ப உள்ளனர் .  கடந்த மூன்று மாதங்களுக்க முன்னர்  பணி நிமித்தமாக அண்டார்டிகா சென்ற விஞ்ஞானிகள் தென்னாப்பிரிக்காவில் சிக்கிய நிலையில் , நாளை நாடு திரும்ப உள்ளனர் . கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது . உலக அளவில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை  50 லட்சத்து 90 ஆயிரமாக அதிகரித்துள்ளது .  உலகளவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 29 ஆயிரத்து 739 ஆக உயர்ந்துள்ளது .  கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில்  தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியதையடுத்து கடந்த மூன்றுமாத காலமாக பல்வேறு நாடுகளில் முழு அடைப்பு  நடைமுறையில் இருந்து வருகிறது .  

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் அவசர பணி நிமித்தமாக இந்தியாவிலிருந்து 26  பேர்கொண்ட விஞ்ஞானிகள் குழு அண்டார்டிகா விரைந்தது, பின்னர் அங்கு பணி  முடித்து தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனுக்கு திரும்பியபோது விமான சேவை ரத்து செய்யப்பட்டதால் அவர்கள் இந்தியா திரும்ப முடியாமல்  அங்கு சிக்கினர் .  இந்நிலையில் இந்தியாவின் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இது குறித்த ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள இந்திய துணைத் தூதர் அஞ்சு ரஞ்சன் , தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை மற்றும் டெல்லி புறப்பட்ட உள்ள விமானங்களில் பயணிக்க இதுவரை சுமார் ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர் .  அவசர தேவையை பொறுத்து பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது .கேப்டவுனில் சிக்கித்தவிக்கும் 26 விஞ்ஞானிகள் இந்த வாரம் வீடு திரும்ப உள்ளனர் . 

அவர்கள்  அண்டார்டிகாவுக்கு பயணம் மேற்கொண்டு திரும்பியபோது கேப்டவுனில் சிக்கினார் ,  கடந்த மூன்று மாதங்களாக இங்கே இருந்து வருகின்றனர். நாடு திரும்ப உள்ள விமானத்தில் 26 விஞ்ஞானிகளுடன் 150 மாணவர்களும் பயணிக்க உள்ளனர்.  அவர்களை  பத்திரமாக நாட்டிற்கு அனுப்பிவைக்க முன்னுரிமை   அளிக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஒரு வழி விமானத்திற்கான டிக்கெட் விலை 15,000 ரேண்டுகள் ஆகும் , இது எஸ்.ஏ.ஏ.வால் நிர்ணயிக்கப்பட்டது,  இந்திய அரசாங்கத்திற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை .   சாதாரண டிக்கெட் விலையைவிட  இது மூன்று மடங்கு அதிகமாக உள்ளது எனவும் அவர் கூறினார்.  பயணிகள் இதை செலுத்தித்தான் ஆக  வேண்டுமென தெரிவித்த அவர்,   பணம் செலுத்த முடியாதவர்களை விமானதில் ஏற்ற முடியாது , அவர்களுக்காக நான் மிகவும் வருந்துகிறேன் நம் நாட்டு விமான சேவையை தொடங்கியவுடன் தள்ளுபடி விலையில் பயணிக்க ஏற்பாடு செய்யப்படும் .  அதுவரை பொறுமையாக காத்திருக்க வேண்டும் , யாரும் மனச்சோர்வு அடைய வேண்டாம் என ரஞ்சன் கேட்டுக்கொண்டுள்ளார் . 

click me!