நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் வகையில் வருகிற 17ஆம் தேதி பெங்களூரில் நடைபெறவுள்ள கூட்டத்தில் 24 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் இருந்து திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளும் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.
பாஜகவிற்கு எதிராக திரளும் கட்சிகள்
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாத காலமே உள்ள நிலையில் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் நாட்டில் உள்ள எதிர்கட்சிகள் ஒன்றினைந்துள்ளன. கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சிகள் கூட்டத்திற்கு பீகார் முதலமைச்சர் நித்திஸ்குமார் அழைப்பு விடுத்திருந்தார்.
undefined
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இடதுசாரிகள், சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட 16 கட்சிகளின் தலைவர்களும் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பாஜகவை எதிர்க்க எடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
24 கட்சிகளுக்கு அழைப்பு
மேலும் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதனையடுத்து அடுத்த கூட்டம் பெங்களூருவில் நடத்த எதிர்கட்சிகள் திட்டமிட்டன. இதற்காக வருகிற 17 மற்றும் 18 ஆம் தேதி கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பாட்னாவில் நடைபெற்ற கூட்டத்தில் 17 கட்சிகள் கலந்து கொண்ட நிலையில் தற்போது பெங்களூரில் நடைபெறவுள்ள கூட்டத்தில் 24 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் 17 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ள தலைவர்களுக்கு கர்நாடாக முதலமைச்சர் சித்தராமையா இரவு விருந்து அளிக்கவும் உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்
அமெரிக்கா, லண்டனை தொடர்ந்து தென் ஆப்ரிக்காவிற்கு பறக்கும் அண்ணாமலை..? எப்போது.? ஏன் தெரியுமா.?