2006 சிறுதாவூர் பங்களா பஞ்சமி இல்லை. இப்ப அது பஞ்சமியா... திருமாவை அசிங்கப்படுத்தும் ஷியாம் கிஷ்ணசாமி.!!

By T BalamurukanFirst Published May 25, 2020, 7:36 PM IST
Highlights

தேவையில்லாமல் ஜெயலலிதா மீது பொய்யான புகார்களைக் கூறி வருகிறார் முதல்வர் கருணாநிதி. பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள முரசொலி அலுவலகம், அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள அண்ணா அறிவாலயம் ஆகியவை குறித்து கருணாநிதி வாய் திறக்காமல் மெளனமாக இருப்பது ஏன் என்பதை அவர் விளக்க வேண்டும், என திருமாவளவன் 2006 ஆம் ஆண்டு பேசிய ஆதாரத்தை வெளியிட்டு, திருமாவளவனை ஓடவிட்டிருக்கிறார் ஷியாம் கிருஷ்ணசாமி.
 

சிறுதாவூர் பங்களா நிலப் பிரச்சனையை புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி 2006 ஆம் ஆண்டு கையில் எடுத்த போது சம்பவ இடத்துக்கு ஓடி வந்த திருமாவளவன், சிறுதாவூர் நிலப் பிரச்சனையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை பழிவாங்கும் நடவடிக்கையில் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி அரசு ஈடுபட்டுள்ளதாக திருமாவளவன் குற்றம்சாட்டியிருந்தார். அதை மேற்கோள் காட்டி, ஜெயாலலிதாவிற்கு "அடியாள் வேலை" பார்த்தது நீங்க தானே? என கேள்வி எழுப்பி திருமாவளவனை லப்ட் அன்ட் ரைட் வாங்கியுள்ளார் ஷியாம் கிருஷ்ணசாமி.

திருமாவளவன் தனது டிவீட்டர் பக்கத்தில், சிறுதாவூர் பங்களாவும் பஞ்சமி நிலத்தில் தான் உள்ளதென குற்றச்சாட்டு உள்ளதே, அது பாஜகவுக்குத் தெரியுமா? தெரியாதா? தெரியும் எனில், அதனையும் மீட்டு தலித்மக்களிடம் ஒப்படைக்க பாஜக போராடுமா? அதன்மூலம் தலித் மக்கள் மீதான தமது அக்கறையை உறுதிப் படுத்துமா? என சரமாரியாக கேள்வி எழுப்பி இருந்தார் திருமாவளவன்.

சிறுதாவூர் பிரச்சனை வந்தால், அது பஞ்சமி நிலம் அல்ல என ஜெயாவிற்கு முட்டு குடுத்து முரசொலி பிரச்சனையை தூண்டுவது...

முரசொலி நில பிரச்சனையில் திமுகவிற்கு முட்டு குடுத்து, சிறுதாவூர் நில பிரச்சனையை தூண்டுவது...

எதற்கு இந்த கேவலமான அரசியல்? பேசாமலாவது இருக்கலாமே? https://t.co/nWdPyNRIsj

— Shyam Krishnasamy (@DrShyamKK)

 

இதற்கு பதிலடி தரும் விதத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் கிருஷ்ணசாமி "பாஜக போராடுவது இருக்கட்டும் திருமா சார், 2006ல் சிறுதாவூர் பிரச்சனையை மருத்துவர் கிருஷ்ணசாமி கையில் எடுத்தபோது ஓடோடி வந்து அன்றும் ஜெயாவிற்கு "அடியாள் வேலை" பார்த்தது நீங்க தானே? இப்போ பாஜக எதிர்ப்பு அரசியலுக்காக பறையர் மக்களின் நிலத்தின் மீது திடீர் அக்கறையோ? என திருமாவளவன் அன்று பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியையும் வெளியிட்டுள்ளார்.

அதில் திருமாவளவன் கூறியிருப்பது, சர்ச்சைக்குரிய சிறுதாவூர் நிலத்தை நான் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தேன். எனக்குக் கிடைத்த ஆவணங்களின்படி, தலித் மக்களுக்குச் சொந்தமானதாக கூறப்படும் நிலத்தை ஆக்கிரமித்து ஜெயலலிதா தங்கும் மாளிகை கட்டப்படவில்லை. குறிப்பிட்ட அந்த இடத்திற்கும், ஜெயலலிதா தங்கும் மாளிகைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மாளிகையைச் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள வேலியைத் தாண்டித்தான் அந்த நிலம் உள்ளது.

தேவையில்லாமல் ஜெயலலிதா மீது பொய்யான புகார்களைக் கூறி வருகிறார் முதல்வர் கருணாநிதி. பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள முரசொலி அலுவலகம், அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள அண்ணா அறிவாலயம் ஆகியவை குறித்து கருணாநிதி வாய் திறக்காமல் மெளனமாக இருப்பது ஏன் என்பதை அவர் விளக்க வேண்டும், என திருமாவளவன் 2006 ஆம் ஆண்டு பேசிய ஆதாரத்தை வெளியிட்டு, திருமாவளவனை ஓடவிட்டிருக்கிறார் ஷியாம் கிருஷ்ணசாமி.
 

click me!