சிலை கடத்தலில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு !! பொன்.மாணிக்கவேல் அதிரடி !!

Published : Jul 24, 2019, 08:12 PM IST
சிலை கடத்தலில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு !!  பொன்.மாணிக்கவேல் அதிரடி !!

சுருக்கம்

சிலை கடத்தல் வழக்கு  சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பொன் மாணிக்கவேல், தமிழகத்தில் நடைபெற்ற சிலை கடத்தலில்  2 அமைச்சர்களுக்கு தொடர்புள்ளது என்று அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளார்.  

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் தலைமையில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவை அமைத்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

ஆனால்  பொன். மாணிக்கவேல் மீது அந்த பிரிவில் பணியாற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உள்பட 12 காவல் அதிகாரிகள் புகார் தெரிவித்திருந்தனர்.  அவர்கள் தங்களை சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் திட்டியும், மிரட்டியும் வருகிறார் என புகாரில் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு வழக்குகளை விசாரிப்பதற்கு என்று தனியாக அலுவலகம் இல்லை.  இதனால் நடுத்தெருவில் நிற்கிறோம் என சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் புகார் தெரிவித்திருந்தார்.

மேலும் தமிழக அரசு தனக்கு முழுமையான ஒத்துழைப்பபு அளிக்கவில்லை எனவும பொன் மாணிக்க வேல் குற்றம்சாட்டியிருந்தார்.

இதனிடையே இது தொடர்பாக வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் நடைபெற்ற சிலை கடத்தலில்  2 அமைச்சர்களுக்கு தொடர்புள்ளது என்று அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதையடுத்து அந்த இரு அமைச்சர்கள் யார்? யார் ? மற்றம் அதற்கான ஆதாரங்கள் போன்றவற்றை ஆகஸ்ட் 6 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு பொன் மாணிக்கவேலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. 

சிலை கடத்தலில் அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக பொன்,மாணிக்கவேல் குற்றம்சாட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, 

PREV
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை