மக்களை கொத்து கொத்தாக உயிருடன் இரும்பு பெட்டிகளில் அடைத்து சித்திரவதை.. கொரோனாவை ஒழிக்க சீனா சைக்கோதனம்.

By Ezhilarasan BabuFirst Published Jan 13, 2022, 10:49 AM IST
Highlights

" டிராக் அண்ட் டிரேஸ்"  யுக்தியின் படி கொரோனா பாசிட்டிவ் ஆனவர்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தும் மையங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். தற்போது இரண்டு கோடி மக்கள் வீடுகளில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். 

கொரோனா இல்லாத நாட்டை உருவாக்கும் முயற்சியில் சீனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களை வலுக்கட்டாயமாக உயிருடன் இரும்பு பெட்டிகளில் அடைத்து துன்புறுத்தி வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான வீடியோ ஆதாரங்கள், புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2019 இறுதியில் கொரோனா வைரஸ் சீனாவில் தோன்றியது. இந்த வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் இந்த வைரசால் உயிரிழந்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த வைரஸில் இருந்து தப்பிக்க முடியாமல் ஒட்டு மொத்த உலகமும் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது. தற்போது உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் மூலம் மூன்றாவது அலை உருவாகியுள்ளது. 

இந்நிலையில்தான் கொரோனாவின் பிறப்பிடமான சீனா " ஜீரோ கோவிட்"  என்ற முழக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இதை நடைமுறைப்படுத்த சீன அரசு சாமானிய மக்கள் மீது பயங்கர கொடுமைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஷான்சி மாகாணத்திலுள்ள சியான் நகரில் வரிசையாக சிறிய அளவிலான இரும்புப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் மக்கள் அடைத்து வைக்கப்பட்டு வருகின்றனர். பல சர்வதேச ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன. இதில் கர்ப்பிணி பெண்கள்,  குழந்தைகள்,  முதியவர்கள் வலுக்கட்டாயமாக இந்தப் பெட்டிகளில் வசிக்கும் நிலைக்கு  தள்ளப்பட்டுள்ளதாக தி டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.  எந்த ஒரு பகுதியிலு ஒரே ஒருவருக்குக்கூட தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் ஒட்டுமொத்த குடும்பமும் இந்த பெட்டிகளுக்குள் அடைத்து வைக்கப்படுகின்றனர். மக்களை நள்ளிரவிலும் வீடுகளில் இருந்து வெளியேற்றி இந்த தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

" டிராக் அண்ட் டிரேஸ்"  யுக்தியின் படி கொரோனா பாசிட்டிவ் ஆனவர்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தும் மையங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். தற்போது இரண்டு கோடி மக்கள் வீடுகளில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். மக்கள் உணவு வாங்க கூட வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது. பீஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக்  போட்டிகள் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளில் அந்நாடு தீவிரம் காட்டி வருகிறது. இதனால் அந்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் இந்த அளவுக்கு கடுமையாக்கப்பட்டு வருகுறிது.  சாமானியர்களும் பொதுமக்களும் இதனால் சொல்லொணாத் துயரத்திற்கு அளாக்கப்பட்டு வருகின்றனர். பல இடங்களில் உணவுப் பொருட்கள் தீர்ந்து விட்டதால், சமூக வலைதளங்கள் மூலம் மக்கள் உதவி கேட்டு வருகின்றனர்.

 ஒமைக்ரான் தோற்றுக்குப் பிறகு 55 லட்சம் வீடுகளில் கொரோனாவை கட்டுப்படுத்த சீன அரசாங்கம் மிகவும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2 பேர் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டதால் அன்யாங்  நகரில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது அங்கு மக்கள்தொகை 55 லட்சம் ஆகும், முன்னதாக 13 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சியான் நகரத்திலும், 11 லட்சம் மக்கள் தொகை கொண்ட யூசே நகரத்திலும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. தற்போது சீனாவில் மொத்தம் 196 கோடி மக்கள் லாக் டவுனில் இருந்து வருகின்றனர். அங்கு வேகமாக வைரஸ் பரவி வரும் நிலையில் இந்த லாக்டோன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு குடியிருப்பில் ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டாலும் கூட ஒட்டுமொத்த குடியிருப்பையும் அப்புறப்படுத்தி மக்கள் முகாம்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். தற்போதைய நிலவரப்படி சீனாவில் 20 மில்லியன் மக்கள் இதுபோன்ற இரும்புப் பெட்டிகள் கொண்ட குவாரண்டின் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

click me!