BJP: போலீசை தள்ளிவிட்டு வியாபாரியை தூக்கி போட்டு மிதித்த பாஜகவினர்…! பதற வைக்கும் வீடியோ

By manimegalai aFirst Published Jan 13, 2022, 8:47 AM IST
Highlights

திருப்பூர் மாவட்டத்தில் தள்ளுவண்டி வியாபாரி ஒருவரை ஏராளமான பாஜகவினர் கும்பலாக சேர்ந்து தூக்கி போட்டு மிதித்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் தள்ளுவண்டி வியாபாரி ஒருவரை ஏராளமான பாஜகவினர் கும்பலாக சேர்ந்து தூக்கி போட்டு மிதித்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கும் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி கடந்த 5ம் தேதி பயணம் சென்றார். மோசமான வானிலை காரணமாக நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு சாலை வழியாக செல்லும் வகையில் அவரது பயணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

காரில் அவர் சென்று கொண்டிருக்கும் போது, வழியில் மேம்பாலம் ஒன்றில் விவசாயிகள் போராட்டம் நடத்தி கொண்டிருந்ததால் பயணம் தடைப்பட்டது. கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தும் செல்ல முடியாததால் பயணத்தை ரத்து செய்துவிட்டு பிரதமர் மோடி திரும்பினார்.

போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததால் பிரதமர் பயணத்தை ரத்து செய்ததாக உள்துறை அமைச்சகம் அறிவித்தது. நாடு முழுவதும் இந்த விவகாரம் பெரும் விவாத பொருளாக மாற, இந்த சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்த கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

பிரதமர் பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது எப்படி? என்பதை கண்டறியும் விதமாக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

நிலைமை இப்படி இருக்க, பிரதமர் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டுக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உரிய பாதுகாப்பு வழங்க தவறியதாக பஞ்சாபில் ஆளும் காங்கிரஸ் அரசை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் தொடர்ச்சியாக போராட்டங்களில் இறங்கி வருகின்றனர்.

அப்படி ஒரு போராட்டம் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடந்தது. ஆனால் போராட்டத்தின் நோக்கம் திசைமாறி, வன்முறை தாக்குதல் என்ற நிலைமைக்கு போய்விட்டது.

பஞ்சாபில் ஆளும் காங்கிரஸ் அரசை கண்டித்து பல்லடம் பேருந்து நிலையம் அருகே பாஜகவினர் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடத்தி கொண்டு இருந்தனர். அப்போது சாலையோரமாக தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து வரும் வியாபாரி ஒருவர் பிரதமர் மோடியை பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

அவர் பிரதமர் மோடியை காரசாரமாக பேசி விமர்சித்ததால் ஆத்திரம் தாங்காத பாஜகவினர் திடீரென அந்த வியாபாரியை அடிக்க பாய்ந்தனர். பாஜகவினரின் இந்த செயலை எதிர்பார்க்காத வியாபாரியோ அருகில் உள்ள பெரிய கடை ஒன்றில் புகுந்து கொண்டார்.

அப்போது பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீசாரும் அந்த கடையின் கதவை சாத்தி வியாபாரியை காப்பாற்றும் நடவடிக்கையில் இறங்கினர். கடையின் உள்ளே இருந்த வியாபாரி பேச… வெளியே காத்திருந்த ஏராளமான பாஜகவினர் கொந்தளித்தனர்.

அவர்களை போலீசார் அமைதிப்படுத்திக் கொண்டிருக்க… என்ன நடக்கிறது என்று தெரியாமல் அந்த கடையில் இருந்த பெண் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் திக்கித்து போயினர். அடுத்த சில விநாடிகளில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசாரை தள்ளிவிட்டு கதவை திறந்து கொண்டு பாஜகவினர் உள்ளே சென்றனர்.

"

அந்த வியாபாரியை தூக்கி போட்டு மிதித்தனர். பாஜகவினர் சரமாரியாக அடித்து கும்மியெடுக்க…. அங்கிருந்த பெண் ஊழியர்கள் அலறிக் கொண்டே பீதியில் அங்கிருந்து ஓடினர். அடி தாங்க முடியாமல் வியாபாரி மயங்கி கீழே சரிந்த பின்னரும் ஆத்திரம் தாங்காத பாஜகவினர் எட்டி உதைத்தபடி திட்டிக் கொண்டே அங்கிருந்து கடந்து சென்றனர்.

காவல்துறையினர் கண் முன்னே நடந்த இந்த தாக்குதலை கண்ட கடை ஊழியர்கள் அதிர்ச்சியில் என்ன செய்வது என்று தெரியாமல் திக்கித்து நின்றனர். பாஜகவின் இந்த தாக்குதல் அப்டியே வீடியோவாக மாறி… இப்போது இணையத்தில் வைரலாக கண்டனங்கள் எழுந்து வருகின்றன. அராஜகத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

click me!