செங்கல் வைத்து விளம்பரம் தேடிய திமுக.. ஆட்சிக்கு வந்து என்ன செஞ்சீங்க.. உதயநிதியை சீண்டும் அதிமுக..!

By vinoth kumarFirst Published Jan 13, 2022, 8:58 AM IST
Highlights

ஒரே ​ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரியை உருவாக்கித் தந்த பெருமை அதிமுகவையும், அதனை சார்ந்த முன்னாள் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரைத்தான் சாரும்.

ஆன்லைன் பதிவால் தகுதி உள்ள வீரர்கள், மாடுகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படலாம். அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் முரண்பாடுகள் நிறைந்ததாக உள்ளது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆர்.பி.உதயகுமார்;- ஒரே ​ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரியை உருவாக்கித் தந்த பெருமை அதிமுகவையும், அதனை சார்ந்த முன்னாள் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரைத்தான் சாரும்.

அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு சட்டத்தையும் அதிமுக அரசே பெற்றுத் தந்துள்ளது. அதன் மூலம் மூலம் ஆண்டுதோறும் 430 அரசு பள்ளி மாணவர்கள்கள் பயன் பெற்று வருகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு இருந்த தடையை நீக்கி அதைத் தொடர்ந்து நடத்துவதற்கும் அதிமுக அரசே சட்டம் இயற்றியது.

ஆன்லைன் பதிவால் தகுதி உள்ள வீரர்கள், மாடுகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படலாம். அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் முரண்பாடுகள் நிறைந்ததாக உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையைக் குறிப்பிட்டு செங்கல் வைத்து விளம்பரம் தேடிய திமுக அரசு, ஆட்சிக்கு வந்து இதுவரை ஒரு செங்கலை கூட நடவில்லை என்று ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.

click me!