கேரளாவுக்கு கடத்தப்பட இருந்த 18 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல்.!! ஓட்டுனர் தப்பியோட்டம்..

By Ezhilarasan BabuFirst Published Jan 6, 2021, 3:00 PM IST
Highlights

அப்போது, லாரியை நிறுத்திய ஓட்டுநர் இறங்கி தப்பியோடினார். உடனே லாறியில் சோதனையிட்டபோது, மாட்டுத் தீவனங்களுக்கிடையே மூட்டைகளில் ரேஷன் அரிசி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை வழியாக கேரளாவுக்கு கடத்த முற்பட்ட 18 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாட்டுத் தீவனங்களுக்கிடையே மறைத்து வைத்து கடத்த முற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தப்பியோடிய ஒட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை பகுதியில் இன்று அதிகாலை உணப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு படையினர் வாகனன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக சந்தேகத்திற்குரிய முறையில் வந்த லாறியை தடுத்து நிறுத்தினர். 

அப்போது, லாரியை நிறுத்திய ஓட்டுநர் இறங்கி தப்பியோடினார். உடனே லாறியில் சோதனையிட்டபோது, மாட்டுத் தீவனங்களுக்கிடையே மூட்டைகளில் ரேஷன் அரிசி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விருதுநகரிலிருந்து கொண்டு வரப்பட்ட சுமார் 18 டன் எடை கொண்ட ரேஷன் அரிசியுடன் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் ரேஷன் அரிசியை கோணம் அரசு உணவு கிட்டங்கியில் ஒப்படைத்தனர். 

தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி நூதன முறையில் கடத்தும் சம்பவங்கள் அன்றாட நிழ்வுகளாக மாறி வருகின்றன. ஒரு சில கடத்தல் சம்பவங்கள் மட்டுமே அதிகாரிகளால் தடுக்கப்படுகிறது எனவும் காவல் துறையும் உணவுப் பொருள் கடத்தில் தடுப்பு பிரிவு துறையும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது எனவும் பொதுமக்கள் அப்போது கோரிக்கை வைத்தனர். 

 

click me!