கொரோனா தடுப்பூசியை சேமித்து வைக்க 41 நகரங்களில் கிடங்குகள். முதற்கட்டமாக 3 கோடி பேருக்கு தடுப்பூசி.

By Ezhilarasan BabuFirst Published Jan 6, 2021, 2:40 PM IST
Highlights

அவற்றை விமானங்கள் மூலம் சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆகிய நகரங்களில் சேமித்துவைக்க அனுப்பப்பட உள்ளது. பிறகு அவை தனித்தனியாக பிரித்து ஒவ்வொரு பகுதிகளாக அனுப்பப்பட உள்ளது. மொத்தம் 37 மாநிலங்களில் உள்ள சேமிப்பு கிடங்குகளுக்கு அவை அனுப்பப்பட உள்ளது. 

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் அனுப்பப்படும் தடுப்பூசிகளை பாதுகாத்து வைக்க சுமார் 41 நகரங்களில் சேமிப்பு கிடங்குகள் செயல்பட உள்ளது என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. ஆனாலும் பிரிட்டனில் உருவாகியுள்ள உருமாறிய வைரஸ் மீண்டும் ஒட்டுமொத்த உலகிற்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அதுமட்டுமின்றி கொரோனா இரண்டாவது அலை, மூன்றாவது அலை தொடர்ந்து தாக்க கூடும் என்ற அச்சம் உள்ளதால் தடுப்பூசி தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது. முன்கூட்டியே வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் தடுப்பூசி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது ஒவ்வொரு மருந்தாக ஒன்றன்பின் ஒன்றாக மக்கள் பயன்பாட்டிற்குவந்தவண்ணம் உள்ளன. 

இந்நிலையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும்  அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்ட் மற்றும் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டிற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் மத்திய  அரசால் குறைந்த விலையில் இம் மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. இன்னும் 12 அல்லது 14 நாட்களுக்குள் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என மத்திய அரசின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொள்முதல் செய்யப்பட்ட மருந்துகளை உடனே அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைத்து மக்களுக்கு விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன்,  தற்போது கொரொனா தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. 

அவற்றை விமானங்கள் மூலம் சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆகிய நகரங்களில் சேமித்துவைக்க அனுப்பப்பட உள்ளது. பிறகு அவை தனித்தனியாக பிரித்து ஒவ்வொரு பகுதிகளாக அனுப்பப்பட உள்ளது. மொத்தம் 37 மாநிலங்களில் உள்ள சேமிப்பு கிடங்குகளுக்கு அவை அனுப்பப்பட உள்ளது. அதற்காக மொத்தம் 41 நகரங்களில் பெரிய அளவிலான சேமிப்புக் கிடங்குகள்  செயல்பட உள்ளது. குறிப்பாக விமான நிலையங்களிலேயே மருத்துவ கிடங்குகள் அமைக்கப்பட உள்ளது. அது பின்னர் ஒவ்வொரு பகுதிக்காக மக்களுக்கு பிரித்து அனுப்பப்படும். நாடு முழுவதும் சுமார் 29 ஆயிரம் சேமிப்பு மையங்கள் செயல்படும். ஒவ்வொரு மையத்திலும் குளிர்சாதன வசதி கொண்ட குளிர்சாதன அறைகள் அமைக்கப்படும். முதலாவதாக முன் களப்பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள் என மொத்தம் 3 கோடி பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

 

click me!