18  எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு !! இன்று மீணடும் விசாரணை !!

First Published Jan 9, 2018, 9:14 AM IST
Highlights
18 mla disqualified case investigate today


டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமியை  மாற்ற வேண்டும் என்று  ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவிடம் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர்  கடிதம் கொடுத்தனர். இந்த 18 எம்எல்ஏக்களையும் சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

தங்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என அறிவிக்கக்கோரி டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சென்னை உயர்நிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

கடந்த  செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி விசாரணைக்கு வந்த வழக்கில் 18 பேரின் மனுவுக்கு பதிலளிக்க வேண்டும் என்று சபாநாயகர் தனபாலுக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து  அக்டோபர்  4ஆம் தேதி விசாரணைக்கு வந்த அந்த வழக்கில் 500 பக்கங்கள் கொண்ட பதில் மனுவை சபாநாயகர் தரப்பு நீதிபதியிடம் தாக்கல் செய்தது.



இந்த வழக்கில் டிடிவி தினகரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வியும் முதலமைச்சர் எடப்பாடி பழன்சாமி தரப்பில் வழக்கறிஞர் வைத்தியநாதனும் ஆஜராகி வாதாடி வருகின்றனர்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் .  மறு உத்தரவு வரும்வரை பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்துவதற்கு நீதிபதிகள் தடை விதித்தனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. காலை 11.30 மணிக்கு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

தமிழக சட்டப் பேரவையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!