
பழுத்த மரம்தான் அதிகமாக கல் அடிபடும் என்பது யதார்த்தம். அந்தவகையில் பெரும் செல்வாக்குடைய நடிகர் ரஜினிகாந்தும் மிக அதிகமாக விமர்சனத்துக்கு ஆளாகி வந்தார். இந்நிலையில் அவர் அரசியலுக்கு வருவதாக அறிவித்திருக்கும் நிலையில் அவர் மீதான விமர்சன தாக்குதல்கள் மிகவும் அதிகமாகி இருக்கின்றன.
அந்த வகையில் மதுரையில் ’தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்’ தனது தகவல் பலகையில் ‘69 வயதினிலே’ எனும் தலைப்பில் ஒரு கவிதையை எழுதி வைத்திருக்கிறது. அதில் ரஜினி நடித்து புகழ் பெற்ற 16 வயதினிலே படத்தின் கதாபாத்திரங்களை வைத்து அதை வடிவமைத்திருக்கிறார்கள். அந்த கவிதை இதுதான்...
69 வயதினிலே...
’மயிலின்’ ஆட்சி முடிந்துவிட்டது
‘பரட்டை’ ஆள வரப்போவதாக சொல்லிவிட்டார்.
‘சப்பானி’களும் தயாராகிவிட்டனர்!
அந்த டாக்டரும் ‘வெறி’யுடன் காத்திருக்கிறார்.
பாவம், மக்கள்தான் ‘குருவம்மாக்கள்’ போல்
நொந்து சாக வேண்டியுள்ளது.
இதில் மயிலின் ஆட்சி என்பது ‘ஜெயலலிதாவின் ஆட்சி’. ‘பரட்டை’ என்பவர் ரஜினி, ‘சப்பாணி’ என்பது கமல் கோஷ்டி. ’டாக்டர்’ என்பது பா.ம.க.வை குறிப்பிடுகிறது.
16 வயதினிலே படத்தில் ஸ்ரீதேவியின் யதார்த்தமான தாயாக நடித்திருந்த காந்திமதியைத்தான் மக்கள் என அடையாளப்படுத்தியிருக்கிறார்கள்.
என்ன ஒரு சிந்தனை, என்ன ஒரு உருவகம்! வர்றே வாவ்! என புகழலாம் போங்கள்