சிறைவைக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் ஸ்பீக்கர் ஃபோனில் தான் பேச வேண்டும் !!! - டெல்லி சுற்றுலா செல்ல 150 டிக்கெட் ரெடி

 
Published : Feb 08, 2017, 08:18 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
சிறைவைக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் ஸ்பீக்கர் ஃபோனில் தான் பேச வேண்டும் !!! - டெல்லி சுற்றுலா செல்ல 150 டிக்கெட் ரெடி

சுருக்கம்

அதிமுக (பன்னீர்செல்வம் – சசிகலா) இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது. நீயா? நானா? என்ற ரீதியில் போட்டி போட்டு கொண்டு  எம்.எல்.ஏக்களை இழுக்கும் பணிகள் திரைமறைவில் குதிரை வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஓ.பி.எஸ்க்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. ஏற்கனவே ஓ.பி.எஸ் வுடன் 5 எம்.எல்.ஏக்கள் இணைந்துவிட்ட நிலையில், சசிகலா சிறைவசம் உள்ள எம்.எல்.ஏக்களை நட்சத்திர ஓட்டலில் தங்கவைத்து பயங்கர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பாதுகாத்து வருகின்றனர்.

மேலும் அவர்கள் யாரிடம் ஃபோன் பேசினாலும் ஸ்பீக்கர் ஃபோனில் தான் பேச வேண்டும் என கட்டளைகள் விதிக்கப்பட்டுள்ளன.

எம்.எல்.ஏக்கள் இங்கேயே இருந்தால் ஓ.பி.எஸ்வுடன் இணைய வாய்ப்பு உள்ளதாக சசிகலா தரப்பு கதிகலங்கி உள்ளது.

எனவே எம்.எல்.ஏக்கள் அனைவரையும் டெல்லி அனுப்புவதற்கு ஏதுவாக 150 விமான டிக்கெட் தயார் நிலையில் இருப்பதாக சசிகலா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு