உச்சகட்ட பதற்றத்தில் தூத்துக்குடி துறைமுகம்..!! பனாமா கப்பலில் வந்து இறங்கிய சீனர்கள்.. கொரோனா அபாயம்..!!

By Ezhilarasan BabuFirst Published Feb 16, 2020, 12:24 PM IST
Highlights

சீனாவில் கொரோனா  வைரஸ் மிகத்தீவிரமாக இருந்துவரும் நிலையில் அந்த வைரசுக்கு   கேவிட் 19  என உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டியுள்ளது இந்த வைரஸ் காய்ச்சலால் சீனாவில் நாள்தோறும் குறைந்தது நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர் ,  

மத்திய அரசின் எச்சரிக்கையை மீறி 14 சீனர்களுடன் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த கப்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .  மத்திய அரசு கடுமையான எச்சரிக்கை விடுத்தும் அதை  மீறி துறைமுக அதிகாரிகள் கப்பலை துறைமுகத்திற்குள் அனுமதித்துள்ளது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .  சீனாவில் கொரோனா  வைரஸ் மிகத்தீவிரமாக இருந்துவரும் நிலையில் அந்த வைரசுக்கு   கேவிட் 19  என உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டியுள்ளது இந்த வைரஸ் காய்ச்சலால் சீனாவில் நாள்தோறும் குறைந்தது நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர் ,  

இக்காய்ச்சலுக்கு இதுவரை 1600 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் .   இந்நிலையில் சீனாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு நாடுகளில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது .  இந்நிலையில் சீனர்கள் 14 பேருடன் பனாமா  கப்பல் ரூயி  தூத்துக்குடி வஉசி துறைமுகத்திற்குள்  அனுமதிக்கப்பட்டுள்ளது .  சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் பாதிப்பு உலகத்தையே நடுங்க வைத்துள்ளது.  இந்நிலையில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்கள் நாட்டு எல்லைகளை மூடி வருகின்றன அதன் ஒரு பகுதியாக சீனாவிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது .  அதேபோல் சீனாவுக்குச் சென்று திரும்பும் இந்தியர்களும் தனிமைப்படுத்தி வைரஸ் பாதிப்பு உள்ளதா என சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே நாட்டிற்குள் அனுமதிக்கப்படுகின்றனர் . 

இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா   வைரஸ் பீதி இருந்துவரும் நிலையில் 14 சீனர்களை கொண்ட பனாமா நாட்டு கொடியுடன் கூடிய சரக்கு கப்பல் ரூயி  தற்போது தூத்துக்குடி வஉசி  துறைமுகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது .  கப்பலில் இருந்தவர்களுக்கு கேவிட் 19 சோதணை செய்யப்பட்டதா என்பதும் தெரியவில்லை ,  இந்நிலையில் கப்பலில் வந்த 14 சீனர்களும் என்ன ஆனார்கள் அவர்கள் கப்பலில் இருந்து வெளியில் சென்று உள்ளார்களா என்பது குறித்தும் துறைமுக அதிகாரிகளுக்கு தகவல் ஏதும் தெரியவில்லை ,தூத்துக்குடி  துறைமுக அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலால் தமிழகத்திலும் கொரோனா  எனப்படும் கேவிட்டு 19 பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்ற அச்சம் உருவாகியுள்ளது.

 

 

click me!