வாண்டடா வந்து சிக்கிய திமுக எம்.பி. தயாநிதி மாறன்... பக்கவாக ஸ்கெட்ச் போட்ட அமைச்சர் ஜெயக்குமார்..!

By vinoth kumar  |  First Published Feb 16, 2020, 11:37 AM IST

மத்தியப்பிரதேசத்தை உலுக்கிய வியாபம் ஊழலுக்கும் மேலான ஊழல் தமிழகத்தில் நடந்துள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு மட்டங்களில் அதிகாரிகள் இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டிருக்கும்போது, துறையின் அமைச்சரான ஜெயக்குமாருக்குத் தெரியாமல் இந்த மோசடிகள் எதுவும் நடந்திருக்காது. எத்தனையோ மாணவர்கள் அரசாங்க உத்தியோகக் கனவோடு தேர்வு எழுதுகின்றனர். அவர்களின் லட்சியங்களை இந்த அரசு கேலிக்கூத்தாக்கிவிட்டது. புதுப்புது டெக்னிக்கைப் பயன்படுத்தி விஞ்ஞானபூர்வமாக முறைகேட்டை அரங்கேற்றுகின்றனர் என தெரிவித்தார்.

திமுக எம்.பி. தயாநிதி மாறன் மீது வழக்கு தொடர மீன்வளத்தறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அனுமதி அளித்துள்ளதால் அமைச்சர் ஜெயக்குமார் சார்பில் அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளார். 

டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் நடைபெறும் அடுத்தடுத்த திருப்பங்களால் தமிழகமே அதிர்ந்துபோயுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் அந்தத் துறை அமைச்சர் ஜெயக்குமாரை மீறி இதுபோன்ற செயல்கள் நடக்க முடியுமா? எனவே, தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் ஜெயக்குமார் பதவி விலக வேண்டும். இல்லை என்றால், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார். 

Tap to resize

Latest Videos

மத்தியப்பிரதேசத்தை உலுக்கிய வியாபம் ஊழலுக்கும் மேலான ஊழல் தமிழகத்தில் நடந்துள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு மட்டங்களில் அதிகாரிகள் இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டிருக்கும்போது, துறையின் அமைச்சரான ஜெயக்குமாருக்குத் தெரியாமல் இந்த மோசடிகள் எதுவும் நடந்திருக்காது. எத்தனையோ மாணவர்கள் அரசாங்க உத்தியோகக் கனவோடு தேர்வு எழுதுகின்றனர். அவர்களின் லட்சியங்களை இந்த அரசு கேலிக்கூத்தாக்கிவிட்டது. புதுப்புது டெக்னிக்கைப் பயன்படுத்தி விஞ்ஞானபூர்வமாக முறைகேட்டை அரங்கேற்றுகின்றனர் என தெரிவித்தார். 

இதையும் படிங்க;- 

இந்நிலையில், இந்த விவகாரம்குறித்து செய்தியாளர்களிடம் பேசியிருந்த அமைச்சர் ஜெயக்குமார்;- அரசியல் ஆதாயத்துக்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் எவ்வளவு பெரிய பொறுப்பில் யார் இருந்தாலும் அவர்கள் சட்டத்துக்கு உட்பட்டவர்கள்தான். அவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அரசியல் ஆதாயத்துக்காக இது போன்று வீண்பழி சுமத்தினால் நிச்சயமாக தயாநிதிமாறன் நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டி இருக்கும். வழக்கு தொடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி முறைகேடு தொடர்பாக அவதூறு பரப்பிய திமுக எம்.பி. தயாநிதி மாறன் மீது வழக்கு தொடர மீன்வளத்தறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து, விரைவில் அவர் மீது உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் வழக்கு தொடர உள்ளார். 

click me!