தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு... தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு..!

By Thiraviaraj RMFirst Published May 9, 2019, 1:16 PM IST
Highlights

13 வாக்குச்சாவடிகளில் வரும் 19ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 

13 வாக்குச்சாவடிகளில் வரும் 19ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 

செய்தியாளர்களை சந்தித்த அவர், இவிஎம் மற்றும் விவிபேட்டில் பதிவான மாதிரி வாக்குகள் அழிக்கப்படாததால் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 46 இடங்களில் 3ஐ தவிர பிற இடங்களுக்கு மறுவாக்குப்பதிவு நடக்க தற்போது வாய்ப்பில்லை. ஈரோடு, ஆண்டிப்பட்டி வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவில் பதிவான வாக்குகளை நீக்காமல் வாக்குப்பதிவு நடைபெற்றதால் தற்போது மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

ஏற்கெனவே பூந்தமல்லி உள்ளிட்ட 10 இடங்களில் மறு வாக்குப்பதிவுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது. அதனையும் சேர்த்து 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த13 வாக்குச்சாவடிகள் தவிர வேறு எங்கும் மறுவாக்குப்பதிவு நடைபெறாது. வாக்குப்பதிவுக்காகவே தேனிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டன. அங்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டது அரசியல் கட்சியினருக்கு தெரியும். மறு வாக்க்குப்பதிவு நடைபெறும் இடங்களில் மக்களவை மற்றும் இடைத்தேர்தல் என இரு முறை வாக்களிக்க வேண்டும்.

 மறு வாக்குப்பதிவுக்கு அனுப்பப்படும் இயந்திரங்கள் அரசியல்வாதிகளின் பார்வைக்கு வைக்கப்படும். வாக்குப்பதிவு நடைபெற உள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு மறு தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்’’ என அவர் தெரிவித்துள்ளார்
 

click me!