ராகுல் காந்தி இந்தியர் தான்... உறுதி செய்த உச்சநீதிமன்றம்..!

By Thiraviaraj RMFirst Published May 9, 2019, 12:06 PM IST
Highlights

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இரட்டை குடியுரிமை வழக்கில் முகாந்திரம் இல்லை என உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து
உத்தரவிட்டது. 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இரட்டை குடியுரிமை வழக்கில் முகாந்திரம் இல்லை என உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இருடுகளில் இரட்டை குடியுரிமை இருப்பதால், அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என ஜெய் பகவான் உள்ளிட்ட நான்கு பேர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கு அடிப்படை முகாந்திரமற்றது.

 

ராகுல் காந்தி இந்தியர் தான். அவர் இந்தியர் இல்லை எனக் கூறுவதற்கு எந்தவித அடிப்படைன்ம் முகாந்திரமும் இல்லை எனக் கூறி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால், ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிடுவதற்கான சிக்கல் தீர்ந்துள்ளது. 

click me!