7 பேர் விடுதலையில் ஆளுநர் தயக்கம் காட்டக் கூடாது... உச்சநீதிமன்றம் அறிவுரை..!

By Thiraviaraj RMFirst Published May 9, 2019, 11:50 AM IST
Highlights

7 பேர் விடுதலையில் நீதிமன்றத்தைக் காரணம் காட்டி ஆளுநர் தயக்கம் காட்ட வேண்டாம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

7 பேர் விடுதலையில் நீதிமன்றத்தைக் காரணம் காட்டி ஆளுநர் தயக்கம் காட்ட வேண்டாம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் தொடர்புடைய ஏழு பேரின் விடுதலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் உறவினர்களின் சார்பாக 9 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமெரிக்கை நாராயணன், சாதிக் அலி உள்ளிட்ட 9 பேர் தொடர்ந்த மனுவில் இந்த 7 பேரின் விடுதலை ஏற்கத்தக்கது அல்ல குண்டு வெடிப்பில் தொடர்புடைய அவர்களை எந்த காரணத்தைக் கொண்டும் விடுதலை செய்யக் கூடாது என்றும் அவர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டது.

இதனை கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஏற்கெனவே இந்த 7 பேர் விடுதலை குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் தற்போது இந்த வழக்கு குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாது. இவர்களின் விடுதலை குறித்து ஆளுநரே முடிவெடிப்பார் எனக்கூறி மனுக்களை தள்ளுபடி செய்தனர். 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசு சார்பில் வாதிட்டபோது, ’தமிழக அரசு சார்பில் 7 பேர் விடுதலை குறித்து ஆளுநருக்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. அதற்கு ஆளுநர் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கும் போது எந்த முடிவையும் எடுக்க முடியாது என்று கூறியதையும் நீதிமன்றத்தில் தங்களது வாதத்தின் போது தமிழக அரசு முன்வைத்தது.

அதற்கு மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், எழுவர் விடுதலை குறித்து ஆளுநரே முடிவெடுக்க வேண்டும். அதற்கு யாரும் தற்போது தடையாக இல்லை. நீதிமன்றத்தை காரணம் காட்டி ஆளுநர் தயக்கம் காட்ட வேண்டிய தேவை இல்லை என்றும் சுட்டிக் காட்டினர்.கருத்தை முன்வைத்தனர்.

click me!