12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது..? நாள் குறித்த அமைச்சர் செங்கோட்டையன்..!

By vinoth kumarFirst Published Jun 18, 2020, 11:50 AM IST
Highlights

மாணவர்களின் பாடத்திட்டம் குறைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சூழ்நிலை பொறுத்து பருவத்தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் பாடத்திட்டம் குறைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சூழ்நிலை பொறுத்து பருவத்தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.
 
தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வுகள் கடந்த கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெற்றது. 8.5 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வை எழுதினர். இதற்கிடையில் கொரோனா வைரஸ் பரவியதால் விடைத்தாள் திருத்தும் பணி பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, கொரோனா பீதியிலும் மே மாதம் இறுதியில் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்று ஜூன் 10-ம்  தேதியுடன் அனைத்து மையங்களிலும் நிறைவடைந்தது. இந்நிலையில், 12ம் வகுப்பு விரைவில் வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகியன. 

இந்நிலையில், இதுதொடர்பாக  கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்ளுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன்;- 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும். கொரோனா காரணமாக புத்தகம் அச்சடிக்கும் பணி தாமதாகி உள்ளது. இம்மாத இறுதிக்குள் புத்தகங்கள் தயாராகும். புத்தகங்கள் தயாரானதும் மாணவர்களுக்கு வழங்குவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்.

மாணவர்களின் பாடத்திட்டம் குறைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சூழ்நிலை பொறுத்து பருவத்தேர்வு ரத்து செய்யப்படும் என்றார். தனியார் பள்ளிகளுக்கு கல்விக்கட்டணம் நிர்ணயம் செய்வது குறித்து முடிவு செய்யப்படும். தனியார் பள்ளிகள் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்துவதாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை  எடுக்கப்படும்  என எச்சரிக்கை விடுத்துள்ளார். 

click me!