மணிப்பூரில் பாஜக ஆட்சி கவிழ்கிறது..? அதிர்ச்சியில் அமித்ஷா... நேரம் பார்த்து பழிவாங்கிய காங்கிரஸ்..!

Published : Jun 18, 2020, 11:25 AM IST
மணிப்பூரில் பாஜக ஆட்சி கவிழ்கிறது..? அதிர்ச்சியில் அமித்ஷா... நேரம் பார்த்து பழிவாங்கிய காங்கிரஸ்..!

சுருக்கம்

மணிப்பூரில் ஆளும் கட்சியாக உள்ள பாஜகவின் 3  எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அதன் இரு கூட்டணிக் கட்சிகளும் வாபஸ் பெற்றதால் மணிப்பூர் ஆளும் பாஜக கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மணிப்பூரில் மொத்தம் 60  சட்டப்பேரவைத் தொதிகளுக்கு கடந்த 2017ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதில், 28 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் இருந்தது. ஆனால், 21 எம்எல்ஏ.க்களை மட்டுமே தன் வசம் வைத்திருந்த பாஜக தலா 4 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி, தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற லோக் ஜனசக்தி, திரிணாமுல் காங்கிரஸ், சுயேச்சையுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியது.

இந்நிலையில், பாஜக எம்எல்ஏ.க்கள் 3 பேர் நேற்று தங்களது பதவியை திடீரென ராஜினாமா செய்தனர். இதையடுத்து, அதன் கூட்டணி கட்சிகளான தேசிய மக்கள் கட்சி எம்எல்ஏ.க்கள் 4 பேர், திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர், சுயேச்சை எம்எல்ஏ ஒருவர் என 3 பாஜக எம்எல்ஏ.க்களை சேர்த்து மொத்தம் 9 எம்எல்ஏ.க்கள் பாஜக அரசுக்கு தெரிவித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர். இதனால், மணிப்பூரில் பாஜக கூட்டணி ஆட்சி கவிழும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மணிப்பூர் சட்டப்பேரவையில் ஆளும் பாஜகவின் பலம் 23ஆக குறைந்துள்ளது. இதனால், சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடத்தப்பட்டு, பாஜகவுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. கர்நாடகா, மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை பாஜக கவிழ்த்தது. ஆனால், தற்பேது மணிப்பூரில் பாஜக ஆட்சியை கவிழ்க்க காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. இதனால், ஆட்சியை அமைப்பதற்கான பெரும்பான்மை காங்கிரஸ் பெற்றுள்ளதால், அடுத்த ஆட்சி அமைக்க அக்கட்சி தீவிரமாக முயற்சிக்கும் என தெரிகிறது.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?