நேற்று முன்தினம் நெகட்டிவ் நேற்று பாஸிட்டிவ்.. டெல்லி சுகாதார அமைச்சருக்கு உறுதியானது கொரோனா..!

By vinoth kumarFirst Published Jun 18, 2020, 10:49 AM IST
Highlights

டெல்லி ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், சுகாதார அமைச்சருமான சத்யேந்தர் ஜெயினுக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவருக்கு ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டெல்லி ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், சுகாதார அமைச்சருமான சத்யேந்தர் ஜெயினுக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவருக்கு ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனாவின் கோரப்பிடியில் தலைநகர் டெல்லி சிக்கி தவித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திணறி வருகிறது. டெல்லியில் இதுவரை 47,102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,1,904 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் மூச்சு விடுவதிலும் சிரமம் இருந்தது. இதனையடுத்து அவர் உடனடியாக ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

பின்னர் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. முதற்கட்டமாக ரத்தம் உள்ளிட்ட மாதிரிகளில் கொரோனா தொற்று இருப்பது தெரியவில்லை, நெகெட்டிவ் என்று வந்தது. ஆனால் 2வது டெஸ்ட்டில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

இதனையடுத்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மக்களுக்காக உங்கள் ஆரோக்கியத்தையும் பார்க்காமல் 24 மணிநேரமும் உழைத்தீர்கள், விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

click me!