11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு... துணை முதல்வராக ஓபிஎஸ் இருப்பது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது... சுப்ரீம் கோர்ட்டில் காரசாரம்!

By vinoth kumarFirst Published Dec 6, 2018, 11:12 AM IST
Highlights

முதல்வர் எடப்பாடிக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக இருப்பது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்ஏல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஒரு அரசியல் கட்சியின் தலைவரை போல் சபாநாயகர் தனபால் செயல்பட்டார் என உச்ச நீதிமன்றத்தில் திமுக தரப்பு வாதிட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடிக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக இருப்பது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்ஏல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஒரு அரசியல் கட்சியின் தலைவரை போல் சபாநாயகர் தனபால் செயல்பட்டார் என உச்ச நீதிமன்றத்தில் திமுக தரப்பு வாதிட்டுள்ளது. 

தமிழக முதல்வர் எடப்பாடிக்கு எதிராக கடந்த ஆண்டு பிப்ரவரி 18-ம் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதனை எதிர்க்கும் விதமாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். அரசு எதிராக வாக்களித்த 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது. இதனையடுத்து திமுக கொறடா சக்கரபாணி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 

இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி மற்றும் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் வெற்றிவேல், தங்கதமிழ்செல்வன் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் ஏகே.சிக்ரி, அசோக் பூஷன், அப்துல் நசீர் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் காரசாரமாக வாதிட்டார். 

இந்த விவகாரத்தில் ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்காது என்பது ஏற்க கூடியது இல்லை. தகுதி நீக்கம் தொடர்பான இந்த வழக்கில் சபாநாயகரின் செயல்பாடுகள் வருத்தமளிக்கிறது. இது மிகப்பெரும் அரசியல் சூழ்ச்சியாகவே கருதப்படுகிறது என கபில் சிபல் வாதிட்டார். இதில் முதலாவதாக வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்து எதிர்மனுதாரராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் பின்பு ஒன்றிணைந்தார். இதையடுத்து அவர் தற்போது துணை முதல்வராக இருப்பது என்பது அரசியல் சட்டத்திற்கு எதிரான ஒன்றாகும்.

 

மேலும் அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி மாநில கவர்னரிடம் முதலாவதாக மனு கொடுத்தது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான். இதையடுத்து தான் பின்னர் திமுக தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்தும் பலனில்லை. மேற்கண்ட 11 பேரையும் அரசு பாதுகாக்கிறது. இதில் எந்தவித ஆதாரமும் இல்லாமலும், பெரும்பான்மை இல்லாமலும் ஒரு கட்சி ஆட்சியில் இருக்கிறது என்றால் அது தமிழகத்தில் தான் என்று தெளிவாக கூற முடியும்.

 

இதில் சட்டமன்ற சபாநாயகராக இருப்பவர் அவருக்கு உரித்தான வேலையை செய்யாமல் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் போல் நடந்து கொண்டுள்ளார் என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது. மேலும் அதிமுக என்ற ஒரு அங்கீகரிக்கப்பட்ட கட்சி இவ்வாறு சட்ட விதிகளை மீறி செயல்படுவது அரசியல் அடிப்படை கிடையாது என கபில் சிபில் வாதிட்டார். இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை மீண்டும் இன்று நடைபெறுகிறது.

click me!