10ம் வகுப்பு பொதுத்தேர்வு; கொரோனா ஜுன் மாதத்துக்குள் சரியாகி விடுமா.? தமிழக அரசுக்கு முக ஸ்டாலின் கேள்வி.?

By T BalamurukanFirst Published May 19, 2020, 6:01 PM IST
Highlights

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்றும் பல்கலைக்கழக மானியக்குழு வழங்கிய பரிந்துறையை கல்வித்துறை பின்பற்ற வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தது.

அமைச்சர் செங்கோட்டையன்,கொரோனா பரவல் குறையாததால் மாணவர்களின் நலன் கருதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இன்று தெரிவித்தார்.ஜூன் 15-ந்தேதி முதல் ஜூன் 25-ந்தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் காலையில் நடைபெறும். பொதுத்தேர்வின் போது ஒரு தேர்வு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்று கூறினார்.

இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்..."
மாணவரும், பெற்றோரும் பதறாத வகையில் தம் திட்டதை அறிவிக்க வேண்டியது அரசின் கடமை.ஜூன் 1-ந்தேதி முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் ஏற்கனவே செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார். தன்னிச்சையாக அறிவித்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எதிர்ப்பு பலமானதும் தள்ளி வைத்தார்கள்.  

தற்போது , ஜூன் 15-ந்தேதி முதல் ஜூன் 25-ந்தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் இன்று கூறியிருக்கிறார். அதற்குள் நிலைமை சீராகிவிடுமா? என தமிழக அரசுக்கு முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

click me!