தமிழக அரசு அதிரடிமேல் அதிரடி..!! ஏழைகள் வயிற்றை குளிரவைக்கும் அறிவிப்பு இது..!!

By Ezhilarasan BabuFirst Published May 19, 2020, 5:45 PM IST
Highlights

2020 - 21 வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ,  சாலை திட்ட பணிகள் மற்றும் குளங்கள் பராமரிப்பு  குறித்து கேட்டிருந்தார் . 

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 407 அம்மா உணவகங்களில் நாளை முதல் ஊரடங்கு காலம் வரை விலையில்லாமல் உணவு வழங்க  தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார் .  நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி ஊரடங்கு காலத்தில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது .  கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 407 அம்மா உணவகங்களில் நாளை முதல் ஊரடங்கு காலம் வரை விலை இல்லாமல் உணவு வழங்க தமிழக முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளதால் , உடனடியாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார் . 

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் நாள்தோறும் வழங்கப்பட்டு வரும் குடிநீர் வினியோகம் குறித்தும் ,  நகராட்சி பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குடிநீர் வினியோகம் மற்றும் திட்டப்பணிகள்  குறித்தும் ,  துறை சார்ந்த அலுவலரிடம் அமைச்சர் அவர்கள் கேட்டறிந்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார் .  ஒரு காலத்தில் உலகையே அச்சுறுத்திய போலியோ நோயை ஒழிக்க அனைவரும் ஒரே நேரத்தில் சொட்டு மருந்து கொடுத்து இந்தியாவிலேயே போலியோ இல்லாத  மாநிலமாக தமிழ்நாடு முன்னோடியாக விளங்கியது .  அதேபோல இப்பொழுது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரசையும் விரட்ட நாம் அனைவரும் ஒன்றிணைந்து அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பொதுமக்களுக்கு முகக் கவசம் அணிதல் அடிக்கடி சுத்தமாக கைகளை கழுவுதல் அனைத்து இடங்களிலும் 2 மீட்டர்  இடைவெளியுடன் ஒருவருக்கு ஒருவர் தள்ளி நிற்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவற்றை செயல்படுத்த வேண்டும் . 

உயிர்காக்கும் இந்த உன்னத பழக்கங்களை தொடர்ந்து பின்பற்றினால் வைரஸ் தொற்றை முழுமையாக ஒழித்துவிடலாம் எனவே அனைவரும் முழுமூச்சுடன் செயல்பட்டு இந்த நோயை விரட்ட வேண்டும் என மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்தார் பின்னர் சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும் ஊரடங்கு காலத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு தளர்வுகளை  அறிவித்துள்ள நிலையில் மாநகராட்சி பகுதிகளில் நிறைவேற்றப்பட வேண்டிய மழைநீர் வடிகால் திட்டப்பணிகள் ,  2020 - 21 வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ,  சாலை திட்ட பணிகள் மற்றும் குளங்கள் பராமரிப்பு  குறித்து கேட்டிருந்தார் . 

மேலும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சர் அவர்கள் சென்னையில் குடிசைவாழ் பகுதிகளில் வசிக்கும்  26 லட்சம் மக்களுக்கு 50 லட்சம் முகக் கவசங்கள் வழங்க உத்தரவிட்டார்கள் தற்போது வரை 8 லட்சம் நபர்களுக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்தார் . நகராட்சி  நிர்வாக ஆணையரகத்தின் சார்பில் 14 மாநகராட்சிகள் 121 நகராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் சீர்மிகு நகரத் திட்ட பணிகள் , அம்ருத்  திட்டப்பணிகள் ,  குடிநீர் திட்டப்பணிகள் ,  சாலை பணிகள் ,  தெருவிளக்கு மற்றும் பாதாள சாக்கடை திட்டம் போன்ற பல்வேறு திட்டப்பணிகள் குறித்தும் பணிகளை விரைந்து முடித்து விடவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார் . 

 

 

click me!