1000வது கோயில் குடமுழுக்கு.. இறைநம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் இணையற்ற ஆட்சி.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

By vinoth kumar  |  First Published Sep 10, 2023, 1:14 PM IST

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இறை நம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் இணையற்ற ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


இரண்டு ஆண்டு காலத்தில் 5000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்களை மீட்டது திமுக அரசு என முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். 

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக அரசு ஆட்சியமைத்தது. திமுக அரசு பொறப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் நடைபெறும் 1000வது குடமுழுக்கு விழா மேற்கு மாம்பலம்  அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் இன்று காலை நடைபெற்றது. இதில், அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். இந்நிலையில்,  இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கும், அதிகாரிகளையும், அலுவலர்களையும் முதல்வர் பாராட்டியுள்ளார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- திமுக முக்கிய பிரமுகர் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கம்.. என்ன காரணம் தெரியுமா?

இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்;- எல்லார்க்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியில் அனைத்துத் துறைகளும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் அனைத்திலும் சிறப்பாக இருக்கின்றன. 5000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்களை இரண்டு ஆண்டு காலத்தில் மீட்டது திமுக அரசு. இன்றைய நாள், 1000-ஆவது கோயில் குடமுழுக்கு விழாவை மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோயிலில் நிகழ்த்தியிருக்கிறது இந்து சமய அறநிலையத் துறை.

இதையும் படிங்க;- உதயநிதி கருத்திற்கு வலு சேர்த்த ஆர்எஸ்எஸ் தலைவர்.! சமூகத்தில் பாகுபாடுகள் இருக்கும் வரை இடஒதுக்கீடு அவசியம்

இறைநம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் இணையற்ற ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இதற்குக் காரணமான இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி. கே. சேகர் பாபுவையும், அதிகாரிகளையும், அலுவலர்களையும் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்! என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

click me!