என்னது பிரதமர் மோடி அண்ணா வழியை பின்பற்றுகிறாரா? ஒரே போடாக போட்ட ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்.!

By vinoth kumarFirst Published Sep 10, 2023, 7:31 AM IST
Highlights

ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடியின் மேஜையில் இந்தியா என்று பெயர்ப் பலகைக்கு பதிலாக பாரத் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். 

இந்தியாவின் பெயர் மாற்றத்தில் அண்ணாவின் வழியை பிரதமர் மோடி பின்பற்றுகிறார் என்று ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

இந்தியா என்ற பெயரை பாரத் (Bharat) என்று மாற்ற மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருவதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்த சூழலில் டெல்லியில் நேற்று நடைபெற்ற ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடியின் மேஜையில் இந்தியா என்று பெயர்ப் பலகைக்கு பதிலாக பாரத் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். 

இதையும் படிங்க;- மாரிமுத்து.. நானும் அந்தக்காலத்துல நாங்க அப்படி இருந்தோம்.. ஃபிளாஷ்பேக்கை சொல்லி கலங்கும் சீமான்!

இதுதொடர்பாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்;- பிரதமர் மோடி முன்னாள் முதல்வர் அண்ணாவின் வழியை பின்பற்றுகிறார் என்று நினைக்கிறேன். மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை தமிழ்நாடு என மாற்றியது சரி என்றால் இந்தியாவை பாரத் என மாற்ற முடிவு செய்வதும் சரியானதுதான். முதலமைச்சருக்கு கொடுப்பதுபோல், ஆளுநருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். இதை தமிழக அமைச்சர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதுதான் மரபு.

இதையும் படிங்க;-  Bharat: இந்தியா கிடையாது.. 'பாரத்'.. ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி அமர்ந்துள்ள பகுதிக்கு பெயர் மாற்றம் !!

சனாதனம் என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டது அல்ல. அது இந்து மதத்தின் ஒரு அங்கம். இந்து மதத்தில் காலத்தின் அடிப்படையில் தோன்றிய சாதிகள் பல்வேறு சமூக வெறுப்புகளை உருவாக்கியது என்பதை மறுக்க இயலாது. ஆனாலும் இந்து மதம் அதனை போதிக்கவில்லை. எல்லோரையும் சமமாக தான் நடத்த வேண்டும் எனக் கூறுகிறது என சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

click me!