எம்எல்ஏக்கு 100% ஊதிய உயர்வு! மக்களுக்கு 70% கட்டண உயர்வு? ஈவு இரக்கமற்ற செயலா? அல்லல் படும் அப்பாவிகள்...

 
Published : Jan 20, 2018, 05:18 PM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
எம்எல்ஏக்கு 100% ஊதிய உயர்வு! மக்களுக்கு 70% கட்டண உயர்வு? ஈவு இரக்கமற்ற செயலா? அல்லல் படும் அப்பாவிகள்...

சுருக்கம்

100 per salary increment for MLA 70 per increase in tariff for the people

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்குக் கட்டண உயர்வு நேற்று அறிவிக்கப்பட்டது.  சாதாரண பஸ் கட்டணம் புறநகர் ரூ.5 லிருந்து ரூ.6 ஆக உயர்வு. விரைவு பஸ் கட்டணம் ரூ.17 லிருந்து 24 ஆக உயர்வு. அதிநவீன பஸ் கட்டணம் குறைந்த பட்ச கட்டணம் ரூ.21 லிருந்து ரூ.30 ஆக உயர்வு.

தொழிலாளர் ஊதிய உயர்வு, ஒய்வூதிய ஊதிய உயர்வு , எரிபொருள் விலை உயர்வு , பராமரிப்பு செலவு உள்ளிட்ட , தவிர்க்கமுடியாத காரணங்களுக்காக பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பி்ல் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பேருந்து கட்டண உயர்வை தடாலடியாக உயர்த்தி அறிவித்திருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - துனைமுதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. நிர்வாகத் திறமையின்மையை வெளிச்சம் போட்டு காட்டுவதோடு, போக்குவரத்து கழகத்தில் நிலவும் நிர்வாகச் சீர்கேடுகளையும், ஊழலையும் இன்னும் ஊக்குவிக்கும் விதமாகவே இந்த இரு மடங்கு கட்டண உயர்வு இருக்கிறது.

ஓட்டை ஒழுகல் பேருந்துகளை மக்கள் தலையில் கட்டி, இரு மடங்குக்கும் மேல் கட்டணம் வசூலிக்கும் அதிமுக அரசுக்கு துளியும் மனசாட்சியும், மக்கள் மீது அக்கறையின்மையையும் காட்டுகிறது. பேருந்து தொழிலாளர்களின் போராட்டத்தின் எதிரொலியாகவே இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சட்டமன்ற உறுப்பினர்களின் மாத ஊதியம் 55 ஆயிரம் ரூபாயில் இருந்து 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கும். மசோதா நிறைவேற்றப்பட்டால் அரியர்ஸ் தொகையுடன் சேர்த்து சட்டமன்ற உறுப்பினர்கள் தலா 3லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுவர். முன்னாள் எம்எல்ஏக்கள் 20ஆயிரம் ரூபாய் வரை ஓய்வூதியம் பெறுவர் என இப்பட்ட ஒரு அறிவிப்பு கடந்த பத்து நாட்களுக்கு முன்பு தமிழ சட்ட சபையில் அறிவிக்கப்பட்டது.

எம்எல்ஏக்கு 100% ஊதிய உயர்வு; மக்களுக்கு 70% கட்டண உயர்வு. அரசின் ஈவு இரக்கமற்ற செயலால் பாதிக்கப்படுவது அப்பாவி பொது மக்கள்தான்.

முன்பு ஜெயலலிதா ஆட்சியின் போது அறிவித்தபோது கூறிய காரணம், போக்குவரத்துக் கழகம் நட்டத்தில் இயங்குகிறது என்று? இப்போது நட்டமில்லாமலா இயங்குகிறது. சுமார் 21 ஆயிரம் கோடி நட்டம். பேருந்து பணிமனைகளை அடகு வைத்து நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் போக்குவரத்து கழகத்தை இதுபோன்ற தடாலடி இருமடங்கு கட்டண உயர்வு மூலம் சரிசெய்துவிட முடியாது. மாறாக அங்கு நிலவும் ஊழலையும், நிர்வாகச் சீர்கேடுகளையும் களைய வேண்டும்.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!