காங்கிரஸ் ஆட்சியை கவுத்துட்டாங்க...! இவங்க ரெண்டு பேரும் தான் காரணம்...! போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர்...! 

 
Published : Jan 20, 2018, 05:10 PM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
காங்கிரஸ் ஆட்சியை கவுத்துட்டாங்க...! இவங்க ரெண்டு பேரும் தான் காரணம்...! போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர்...! 

சுருக்கம்

The 2G case is a conspiracy to bring down the Congress party which gave good plans

நல்ல திட்டங்களை வழங்கிய காங்கிரஸ் கட்சியை வீழ்த்த நடத்தப்பட்ட சதியே 2 ஜி வழக்கு எனவும் காங்கிரஸ் ஆட்சியை வீழ்ந்ததற்கு காரணம் மன்மோகன் சிங்கும் சிதம்பரமும்தான் எனவும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். 

உலகையே உலுக்கிய  2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில்  அரசுக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்டுத்தியதாக எழுந்த  குற்றச்ட்டில் முகுற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய  அமைச்சர்  ஆ.ராசா உள்ளிட்ட  17 பேர் மீது சிபிஐவழக்கு பதிவு செய்தது. இவர்கள் அனைவரும் கைது  செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் ஜாமீனில் வெளிவந்தனர்.

இது தொடர்பாக டெல்லி சிபிஐ சிறப்பு நிதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. இதையடுத்து ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டார் மீது குற்றம் நிரூபிக்கப்படவில்லை என கூறி  அவர்கள் அனைவரையும் டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நீதிபதி ஓ.பி. சைனி  விடுதலை செய்தது உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, நல்ல திட்டங்களை வழங்கிய காங்கிரஸ் கட்சியை வீழ்த்த நடத்தப்பட்ட சதியே 2 ஜி வழக்கு எனவும் காங்கிரஸ் ஆட்சியை வீழ்ந்ததற்கு காரணம் மன்மோகன் சிங்கும் சிதம்பரமும்தான் எனவும் தெரிவித்தார். 

2 ஜி வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் மெளனம் வருத்தம் அளித்தது எனவும் 2-ஜி வழக்கில் வழங்கப்பட்ட அனைத்து தீர்ப்புகளும் சரியென கூற முடியாது எனவும் குறிப்பிட்டார். தீர்ப்பில் பிழைகள் இருந்ததுக்கு சிஏஜி தான் காரணம் எனவும் குறிப்பிட்டார். 

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!