100 ஜெயலலிதா... 200 கருணாநிதிக்கு அமித்ஷா சமம்... தாறுமாறாக புகழ்ந்து தள்ளிய நடிகர் ராதாரவி..!

By vinoth kumarFirst Published Feb 10, 2020, 11:46 AM IST
Highlights

நாட்டை காப்பாற்றும் ஒரே கட்சி பாஜக என்றார். இந்தியாவில் 80 சதவிகிதம் உள்ள இந்துக்கள் அடிபணிய கூடாது என்றும் தெரிவித்தார். அமெரிக்க விமான நிலையத்தில் நடிகர் கமல்ஹாசன் சிக்கியதாகவும், அப்போது தாம் ஒரு இந்து என கூறி தப்பி வந்ததாகவும் நடிகர் ராதாரவி குறிப்பிட்டார். ரஜினிகாந்துக்கு புரிந்துவிட்டது, அவர் மிகச் சரியாக பேசிவருகிறார் என்றும், ரஜினியை ஒன்றும் செய்ய முடியாது தெரிவித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 100 ஜெயலலிதா, 200 கருணாநிதிக்கு சமம் என அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நடிகர் ராதாரவி புகழாரம் சூட்டியுள்ளார். 

நடிகர் ராதாரவி திமுகவில் இருந்த போது நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இதனையடுத்து, திமுகவில் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். அதிருப்தி அடைந்த அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். 

இதனையடுத்து, 4 மாதங்களில் அதிமுகவில் இருந்து விலகி, தற்போதைய பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார். இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய ராதாரவி;- 67 ஆண்டுகளாக திராவிடத்தையே சுவாசித்திருந்த நான் தற்போது பாஜகவில் சேர்ந்து தேசியத்தை சுவாசிக்க வந்துள்ளேன். இவ்வுளவு பெரிய கூட்டத்தை நான் எதிர்பார்க்கவில்லை என்றார்.

250 வருடம் ஆனாலும் தமிழகத்தில் பாஜக கலூன்ற முடியாது கூறியவன்தான் நான். ஆனால் அது தவறு எனவும், வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது உறுதி அதில் எந்த சந்தேகமும் இல்லை என தெரிவித்தார். மேலும், பேசிய அவர் நாட்டை காப்பாற்றும் ஒரே கட்சி பாஜக என்றார். இந்தியாவில் 80 சதவிகிதம் உள்ள இந்துக்கள் அடிபணிய கூடாது என்றும் தெரிவித்தார். அமெரிக்க விமான நிலையத்தில் நடிகர் கமல்ஹாசன் சிக்கியதாகவும், அப்போது தாம் ஒரு இந்து என கூறி தப்பி வந்ததாகவும் நடிகர் ராதாரவி குறிப்பிட்டார். ரஜினிகாந்துக்கு புரிந்துவிட்டது, அவர் மிகச் சரியாக பேசிவருகிறார் என்றும், ரஜினியை ஒன்றும் செய்ய முடியாது தெரிவித்தார். 100 ஜெயலலிதா, 200 கருணாநிதிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமம் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.

click me!