2014-ல் ஆதரவு..! 2019-ல் எதிர்ப்பு..! பாஜக – விஜய் மோதல் துவங்கியது எங்கு..? ஒரு பரபர பின்னணி..! Part - 1

By Selva KathirFirst Published Feb 10, 2020, 10:47 AM IST
Highlights

நடிகர் விஜய் எப்போதுமே ஏதோ ஒரு அரசியல் கட்சியின் ஆதரவாளராகவே தன்னை காட்டிக் கொள்ளக்கூடியவர். இதற்கு காரணம் அவருக்கு எப்போதும் அரசியல் ஆசை உண்டு. அந்த ஆசை அவரது தந்தையிடம் இருந்து வந்தது. விஜயின் தந்தை எஸ்.ஏ.சியின் 1980களில் வெளியான படங்களில் அரசியல் வசனம் தூள் பறக்கும். விஜய் ஹீரோவாக அறிமுகமான படத்திலேயே அரசியல் வசனங்களுக்கு குறைவு இருக்காது.

2014ம் ஆண்டு பாஜக பிரதமர் வேட்பாளரான மோடியை கோவைக்கு தேடிச் சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்த விஜய், 2016ம் ஆண்டு மோடிக்கு எதிராக வெளிப்படையாக எதிர்ப்பு குரல் கொடுத்ததன் பின்னணி மிகவும் சுவாரஸ்யமானது.

நடிகர் விஜய் எப்போதுமே ஏதோ ஒரு அரசியல் கட்சியின் ஆதரவாளராகவே தன்னை காட்டிக் கொள்ளக்கூடியவர். இதற்கு காரணம் அவருக்கு எப்போதும் அரசியல் ஆசை உண்டு. அந்த ஆசை அவரது தந்தையிடம் இருந்து வந்தது. விஜயின் தந்தை எஸ்.ஏ.சியின் 1980களில் வெளியான படங்களில் அரசியல் வசனம் தூள் பறக்கும். விஜய் ஹீரோவாக அறிமுகமான படத்திலேயே அரசியல் வசனங்களுக்கு குறைவு இருக்காது.

ஆனால் விஜய் தேர்வு செய்த அரசியல் பாதை விசித்திரமானது. தமிழகத்தை பொறுத்தவரை முன்னணி நடிகர்கள் ஏதோ ஒரு அரசியல் கட்சியுடன் நெருக்கமாக இருக்க வேண்டிய கட்டாயம் உண்டு. எம்ஜிஆர் திமுகவில் இருந்து பிறகு தனிக்கட்சி துவங்கியதாகட்டும் பிறகு வந்த சிவாஜி, ராமராஜன், விஜயகாந்த், சரத்குமார், கார்த்தி போன்றோர் எல்லாம் ஒரு அரசியல் கட்சியின் ஆதரவாளர்களாக தங்களை காட்டிக் கொண்டனர். இதற்கு காரணம் அதன் மூலமாக கிடைக்கும் பாதுகாப்பு மற்றும் வருமானம்.

ஆனால் விஜய் இந்த நடிகர்கள் யாரையும் போல தனது அரசியல் பாதையை அமைத்துக் கொண்டவர் இல்லை. சொல்லப்போனால் மற்ற நடிகர்கள் ஒரு அரசியல் கட்சியின் ஆதரவாளர்களாக இருப்பார்கள். ஆனால் விஜய் அந்த கட்சிக்கோ அல்லது அந்த கட்சியின் தலைமைக்கோ நெருக்கமானவராக இருக்கமாட்டார். ஆனால் அந்த கட்சிக்கோ அல்லது அந்த கட்சியின் தலைவருக்கோ பணிந்து செல்லக்கூடியராக இருப்பார். இது தான் அவரது பிரச்சனைக்கு காரணம்.

எஸ்.ஏ.சி எப்போதுமே திமுக அபிமானியாக இருந்தவர். அந்த வகையில் விஜயும் கூட திமுகவின் அனுதாபியாகத்தான் துவக்கத்தில் பார்க்கப்பட்டார். ஆனால் திமுகவுடன் பிரச்சனைக்கு காரணம் 2006 முதல் 2011 வரையிலான கால கட்டத்தில் விஜய் தனது அரசியல் அபிலாசைகளை வெளிப்படையாக்கியது. இந்த கால கட்டத்தில் மாஸ் நடிகரான விஜய் நலத்திட்ட உதவிகள் அதிகம் செய்ய ஆரம்பித்தார். மேலும் ரசிகர் மன்றத்தை வலுப்படுத்தினார். கொடி அறிமுகம் செய்தார்.

இங்கு தான் பிரச்சனை ஆரம்பித்தது. ஏனென்றால் விஜய் இளைய தளபதி என அழைக்கப்பட்டார். திமுகவிலும் ஒரு தளபதி இருக்கிறார். இந்த பெயர் பிரச்சனை தான் திமுக – விஜய் உரசலுக்கு காரணமானது. கோவையில் பிரமாண்ட நலத்திட்டம் வழங்கும் விழாவிற்கு அப்போது விஜய் ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். ஒரு அரசியல் கட்சியின் மாநாடு போல் அதற்கு ரசிகர்கள் குவிய ஆரம்பித்தனர். உளவுத்துறை அப்போது ஆட்சியில் இருந்த திமுக தலைமையை அலர்ட் செய்தது.

அந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறக்கூடாது என்று திமுக மேலிடம் கட்டளையிட்டது. விழாவிற்கு வந்த விஜயை காரில் இருந்து கூட இறங்கவிடாமல் போலீசார் கோவையில் இருந்து சென்னைக்கு திருப்பி அனுப்பினர். விஜயும் எந்த பிரச்சனையும் செய்யாமல் திரும்பிச் சென்றார். இது அவருக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம். பல்லாயிரக்கணக்கில் ரசிகர்கள் கூடியிருந்தும் சாதாரண இன்ஸ்பெக்டர் ஒருவர் விஜயை காரில் இருந்து இறங்கவிடவில்லை.

தகவல் அறிந்த எஸ்.ஏசி அதிர்ந்து போனார். அவர் அந்த நிகழ்ச்சியில் விஜய்க்கு பதில் கலந்து கொண்டு நலத்திட்டங்களை வழங்கினார். மறு நாளே தனது மகனை விஜயை அழைத்துக் கொண்டு நேராக கலைஞரை சென்று சந்தித்து நடந்தவற்றை கூறினார். ஆனால் கலைஞர் அதனை கண்டுகொள்ளவில்லை. அப்போது திமுக – விஜய் உரசல் அதிகமானது. இங்கு ஒரு விஷயத்தை குறிப்பிட்டே ஆக வேண்டும். தனக்கு நேர்ந்த அவமானத்தை விஜய் மறைத்தார். எதிர்வினையாற்றவில்லை.

click me!