100 நாள் வேலை என்பது தண்ட சம்பளம்.. அதை ஒழிக்க வேண்டும்.. சீமான் சொன்ன பயங்கர காரணம்.

By Ezhilarasan BabuFirst Published Oct 1, 2021, 8:39 AM IST
Highlights

100 நாள் வேலை திட்டம் என்பது புறணி பேசுவதற்கான தளமாகவே இருக்கிறது என்றும், விவசாயத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் 100 நாள் வேலை திட்டத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்றும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். 

100 நாள் வேலை திட்டம் என்பது புறணி பேசுவதற்கான தளமாகவே இருக்கிறது என்றும், விவசாயத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் 100 நாள் வேலை திட்டத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்றும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழ் தேசியம், விவசாயம், மண்ணுரிமை என கொள்கை முழக்கமாக வைத்து நாம் தமிழர் கட்சி இயங்கி வருகிறது. அப்படிப்பட்ட கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு எதிராக பேசியுள்ள கருத்து  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு 13 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நிலையில், நாம்தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து விழுப்புரத்தில் சீமான் பரப்புரை மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு கொண்டுவந்துள்ள 100 நாள் வேலை திட்டத்தில் 100 ரூபாய் 200 ரூபாய்கூட கொடுங்கள், ஆனால் எங்கள் வீட்டு தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு நாங்கள் 500 ரூபாய் கொடுக்கிறோம், அது அவர்களுக்கு போதாது என்றால் நீங்கள் கொடுக்கும் அந்த 200 ரூபாயை அவர்களுக்கு ஊக்கத்தொகையாக கொடுக்கலாம். 100 நாள் வேலை திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், விவசாய வேலைக்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

தற்போது நடந்து வரும் 100 நாள் வேலைத் திட்டத்தால் எந்த பயனும் கிடையாது. வேலைக்கு செல்பவர்கள் அங்கு கூடி விளையாடுவது, புறணி பேசுவதுதான் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு தண்டமாக ஒரு சம்பளம், 100 நாள் வேலை திட்டத்தில் விவசாயத்திற்கு ஆள் கிடைக்கவில்லை, விவசாயத்தை நிறுத்திவிட்டு 100 நாள் வேலைக்கு ஆள் தேடினாள் தினமும் சாப்பிட அரிசி எங்கிருந்து வரும்? இதையெல்லாம் அரசு கவனிக்க வேண்டும், விவசாயம் பார்ப்பதற்கு ஆள் இல்லாத பொழுது  வேளாண் துறைக்கு எதற்கு தனி  பட்ஜெட் என அவர் கேள்வி எழுப்பினார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

click me!