ரூ 5.1/2 கோடி கடனுக்கு 100 கோடி சொத்து ஏலமா..? சுதீஷால் ஆடிப்போன விஜயகாந்த் குடும்பம்..!

By Thiraviaraj RMFirst Published Jun 21, 2019, 1:58 PM IST
Highlights

மாமண்டூர் பாலாற்றங்கரையில் விஜயகாந்த் கல்லூரி பெருமையோடு பார்க்கப்பட்டது ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி. 
அப்படிப்பட்ட கல்லூரி ஏலத்திற்கு வருவதற்கு காரணம் விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷின் நிர்வாகத்திறமை. 
 

மாமண்டூர் பாலாற்றங்கரையில் விஜயகாந்த் கல்லூரி பெருமையோடு பார்க்கப்பட்டது ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி.  அப்படிப்பட்ட கல்லூரி ஏலத்திற்கு வருவதற்கு காரணம் விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷின் நிர்வாகத்திறமை. 

உலகப்புகழ் பெற்ற பெப்சி கம்பெனி இருந்தபோதும் விஜயாகந்த் கல்லூரி என்கிற ஒரு காரணத்தால் புகழ் பெற்றது அந்தக் கல்லூரி. தென்மாவட்ட மக்கள் சென்னை வரும் போதும் போகும் போதும் அந்தக் கல்லூரியை பெருமையோடு பார்த்துச் செல்வார்கள். அப்படிப்பட்ட இந்தக் கல்லூரி 2001ம் ஆண்டும் கட்டப்பட்டது. நிறுவனராக விஜயகாந்தும், பங்குதாரராக அவரது மனைவி பிரேமலதாவும், தாளாளராக அவரது மைத்துனர் எல்.கே.சுதீஷும், செயலாளராக அவரது மூத்த மகன் விஜயபிரபாகரும் உள்ளனர். இந்தக் கல்லூரியை கட்ட தற்போது குடியிருக்கும் தனது வீடு மற்றும் சாலிகிராமத்தில் வேதவல்லி தெருவில் உள்ள காலி மனை ஆகியவற்றை பிணையாக வைத்து கடன் பெற்றுள்ளார் விஜயகாந்த். அப்போது பெறப்பட்ட தொகை 5 கோடியே 52 லட்சத்து 73 ஆயிரத்து 825 ரூபாய். 

வட்டி, மற்றும் இதரத் தொகை தனி. அந்தத் தொகைக்காக 100 கோடி சொத்து ஏலத்திற்கு வந்திருக்கிறது. வெறும் ஐந்தரைக்கோடி சொத்துக்கு 100 கோடி சொத்து ஏலமா? என்கிற சந்தேகம் எழலாம். வங்கி விதிகளின் படி கடனை கட்டவில்லை என்றால் பிணையம் வைக்கப்பட்ட சொத்து, கடன் மூலம் கட்டப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் ஏலத்திற்கு வரும். கட்டவேண்டிய கடன் மற்றும், வட்டி, பிற செலவுகள் போக மீதித் தொகை சம்பந்தப்பட்டவருக்கு வழங்கப்படும்.   

விஜயகாந்த் இந்த நிலைமைக்கு ஆளாகக் காரணம் என்ன? அவரது நண்பர்கள் லியகாந்த் அலிகான், மதுரை சுந்தரராஜன் ஆகியோர் உடன் இருந்த போது சொத்துகள் வாங்குவது, நிர்வகிப்பதை கனகச்சிதமாக செய்து வந்தார் விஜயகாந்த். அவர்களை ஒதுக்கி வைத்து விட்டு மைத்துனர் எல்.கே.சுதீஷ் உள்ளே நுழைந்ததில் இருந்தே விஜயகாந்த்தின் அத்தனை சொத்துக்களையும், கல்லூரி. டிவிகளையும் நிர்வகித்து வருகிறார். 

ஆண்டாள் அழகர் கல்லூரியின் தாளாளர் எல்.கே.சுதீஷ். ஒரு காலத்தில் ஓஹோவென செயல்பட்டு வந்தது. எல்.கே.சுதீஷின் நிர்வாகத்தால் படிப்படியாக மாணவர் சேர்க்கை குறைந்தது. தொடர்ந்து யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைப்படி பேராசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்காமல் பல மாதங்கள் கடத்தியதில் தொடங்கியது சரிவு. விஜயகாந்த் மைத்துனரை நம்பி ஒப்படைத்து விட்டு போய் விட அதிகாரத் தோரணையை சகித்துக் கொள்ள முடியாமல் பல ஆசிரியர்கள் வேலையை விட்டு சென்றனர். கல்வி தரம் குறைந்ததால் மாணவர் சேர்க்கை குறைந்தது.

 

இந்த நிலையில் விஜயகாந்த் குடும்பத்தினரும், எல்.கே.சுதீஷும் கல்லூரி மீது கவனம் செலுத்தாமல் அரசியலில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். அவரது பிள்ளைகளான மூத்த மகன் விஜயபிரபாகரன், வீட்டில் நாய் வளர்க்கிறேன்... கோழி வளர்க்கிறேன்... மாடு வளர்கிறேன் என விளையாட்டுத்தனத்திலும், மற்றொரு மகன் சண்முகபாண்டியன் சினிமாவிலும் கவனம் செலுத்தி வந்தனர். இந்த நிலையில் பார்த்துக் கொள்வார் என நம்பி இருந்த எல்.கே.சுதீஷ் நடு ரோட்டுக்கு கொண்டு வந்து விட்டார். 

கேப்டன் டி.வி எம்.பியாகவும் இருக்கிறார் எல்.கே.சுதீஷ். அங்கு பல ஆண்டுகளாக ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்காததால் அந்த சேனலையும் ஒழித்துக் கட்டிவிட்டார் சுதீஷ். ஆக மொத்தத்தில் விஜயகாந்த் பாடுபட்டு சம்பாதித்த சொத்துக்களை தனது மேம்போக்குத் தனத்தால் மைத்துனர் சுதீஷ் ஏலம்போகும் நிலைக்கு கொண்டு வந்து விட்டார். 
 

click me!