எடப்பாடியிடம் விஜயகாந்த் ரூ.400 கோடி வாங்கியது பொய்யா..? அதிர வைக்கும் உண்மை..!

By Thiraviaraj RMFirst Published Jun 21, 2019, 1:13 PM IST
Highlights

கூட்டணிக்காக எடப்பாடி பழனிசாமியிடம் விஜகாந்த் 400 கோடி வாங்கிக் கொண்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்தியன் ஓவர்சீஸ்
வங்கியில் வாங்கிய கடனுக்காக விஜயகாந்தின் ரூ.100 கோடி சொத்துகள் ஏலத்துக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை
ஏற்படுத்தி உள்ளது. 
 

கூட்டணிக்காக எடப்பாடி பழனிசாமியிடம் விஜகாந்த் 400 கோடி வாங்கிக் கொண்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்தியன் ஓவர்சீஸ்
வங்கியில் வாங்கிய கடனுக்காக விஜயகாந்தின் ரூ.100 கோடி சொத்துகள் ஏலத்துக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை
ஏற்படுத்தி உள்ளது.

 

திமுக உடனும், அதிமுக உடனும் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைக்க தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. நீண்ட
இழுபறிக்கு பிறகே அதிமுகவுடன் கூட்டணி வைத்தது தேமுதிக. இந்த இழுபறிக்கு காரணம் தேமுதிக வைத்த டிமாண்ட் எனக்
கூறப்பட்டது. பிரேமலதா நூற்றுக்கணக்கான கோடி ரூபாயை கேட்டதாகவும் அதை கொடுக்க முடியாது என மு.க.ஸ்டாலின் மறுத்து
விட்டதால் திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்கவில்லை எனக் கூறப்பட்டது. அதேவேளை 4 தொகுதிகள் ஒதுக்கியதோடு எடப்பாடி
விஜயகாந்துக்கு 400 கோடி ரூபாய் பணமாக கொடுத்து கூட்டணிக்கு அழைத்து வந்து விட்டதாக பட்டி தொட்டி எங்கும் பரவலாக
பேசப்பட்டது.

 

ஆனால், விஜயகாந்த் தான் வங்கியில் கடனாக வாங்கிய ஐந்தரை கோடி ரூபாயை அடைக்க முடியாமல் அவரது 100 கோடி மதிப்பிலான
சொத்தை ஏலத்தில் விடப்போவதாக அறிவித்துள்ளது. ஒருவேளை எடப்பாடி பழனிசாமி உண்மையிலேயே 400 கோடி பணத்தை
கொடுத்திருந்தால் வங்கிக் கடனை திருப்பி அளித்திருக்க மாட்டாரா விஜயகாந்த்? அவரது 100 கோடி சொத்து ஏலத்திற்கு வந்திருக்குமா?
அவரது சொத்துக்கள் ஏலத்துக்கு வந்தது ஒருபுறம் அதிர்ச்ட்சியை ஏற்படுத்தினாலும், மறுபுறம் அவர், எடப்பாடி பழனிசாமியிடம்
கூட்டணிக்காக 400 கோடி ரூபாய் வாங்கவில்லை என்கிற உண்மை தெரிய வந்திருக்கிறது. 

தேமுதிகவில் இருந்து விலகி அதிமுகவில் இப்போது அமைச்சராக இருக்கும் மஃப பாண்டியராஜன் விஜகாந்தை பற்றி சில மாதங்களுக்கு
முன் கூறுகையில், ‘’விஜயகாந்த் இதுவரை யாரிடமும் பணம் பெற்றதில்லை. அவரது பணத்தை மட்டுமே செலவு செய்வாரே தவிர
எந்த விஷயங்களுக்காகவும் கூட்டணி கட்சிகளிடம் அவர் பணம் பெற்றதே இல்லை’’ எனக் கூறியிருந்ததியும் நாம் மறந்து விடக்கூடாது.

click me!