வைகோவுடன் செல்ஃபி எடுக்க 100 ரூபாய்... சால்வைக்கு பதில் காசு கேட்கும் மதிமுக..!

Published : Aug 09, 2019, 06:08 PM IST
வைகோவுடன் செல்ஃபி எடுக்க 100 ரூபாய்... சால்வைக்கு பதில் காசு கேட்கும் மதிமுக..!

சுருக்கம்

வைகோவுடன் புகைப்படம் எடுக்க விரும்புவோர் இனி ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார்.  இந்நிலையில், கூட்டணி ஒப்பந்தத்தின்படி அவருக்கு மேலவை எம்.பி. தொகுதி ஒதுக்கப்பட்டது. இதன்படி வைகோ மேலவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.

 

இதனிடையே அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிவிப்பில், ’’வைகோவிற்கு சால்வை அணிவிக்க விரும்புவோர் அதற்கு பதிலாக கழகத்திற்கு நிதி அளிக்கலாம். அத்தனுடன், வைகோவுடன் புகைப்படம் எடுக்க விரும்புவோர் இனி ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது. வாழ்நாள் உறுப்பினராக பதிவு செய்யாதவர்கள் உடனடியாக வாழ்நாள் உறுப்பினராக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!