கொரோனா நிவாரணநிதிக்கு 10 லட்சம் வழங்கினார் மு.க அழகிரி.!!

By Thiraviaraj RMFirst Published Mar 30, 2020, 5:02 PM IST
Highlights

கொரோனா நிவாரண நிதியாக ரூ.10 லட்சத்தை முன்னாள் மத்திய அமைச்சர்,தென்மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரி வழங்கியுள்ளார்.

T.balamurukan

 கொரோனா நிவாரண நிதியாக ரூ.10 லட்சத்தை முன்னாள் மத்திய அமைச்சர்,தென்மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரி வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸால் தற்போது வரை தமிழ்நாட்டில் 67 பேர் பாதிக்கபட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் இரண்டாம் கட்டத்திலிருந்து மூன்றாம் கட்டமான சமூக தொற்றாக மாறுவதைத் தடுக்க பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என சோதனை நடைபெற்றுவருகிறது.

 கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை, விழிப்புணர்வு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வரும் தமிழக அரசு, கொரோனா பாதிப்பை சமாளிக்கும் வகையில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி அளிக்கலாம் என வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனையேற்று பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். மாவட்ட எல்லைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளது.கூட்டம் கூட தடைவிக்கப்பட்டு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. சமூக இடைவெளி விட்டு மக்கள் தங்கள் அடிப்படை தேவைகளை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

 முதல்வரின் கோரிக்கையை ஏற்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிவாரண நிதியாக ரூ.10 லட்சத்தை முன்னாள் மத்திய அமைச்சரும், கலைஞர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி வழங்கியுள்ளார். இதனை மு.க.அழகிரியின் உதவியாளர் சதிஷ் மதுரை ஆட்சியர் வினயிடம் வழங்கியுள்ளார்.


 முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திமுக சார்பில் ரூ.1 கோடி அளிப்பதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதேபோல், திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை நிவாரன நிதியாக வழங்குவார்கள் என ஏற்கனவே அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!