கொரோனாவுக்காக கிள்ளி கொடுப்பவர்கள் மத்தியில் அள்ளிக்கொடுத்த டிடிவி.தினகரன்... மாஸ் காட்டி அசத்தல்..!

By vinoth kumarFirst Published Mar 30, 2020, 4:51 PM IST
Highlights

அமமுக சார்பில்  வெளியிட்டுள்ள அறிக்கையில், " கழகப் பொதுச்செயலாளரும் சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டி.டி.வி. தினகரன் அவர்கள் தமிழக அரசு மேற்கொண்டு வரும் பெருந்தொற்று நோயான கொரோனா   தடுப்பு பணிகளுக்காக தமது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூபாய் ஒரு கோடியை இன்று அளித்துள்ளார். 

உலக நாடுளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால், மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இந்நிலையில், நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர  வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். இருப்பினும் தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. 

இந்நிலையில், கொரோனா நிவாரண நிதிக்கு தமிழக அரசு ரூ.3,280 கோடி ஒதுக்கீடு செய்து பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. ஊரடங்கால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிதி உதவி வழங்க ஏற்பாடு செய்துள்ளது. மேலும், கொரோனா தடுப்பு பணிக்கு பொதுமக்களும் தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்கும்படி முதல்வர் எடப்பாடியும் கேட்டுக்கொண்டுள்ளார். ஆகையால், பல்வேறு தரப்பில் இருந்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில்,  அமமுக சார்பில்  வெளியிட்டுள்ள அறிக்கையில், " கழகப் பொதுச்செயலாளரும் சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டி.டி.வி. தினகரன் அவர்கள் தமிழக அரசு மேற்கொண்டு வரும் பெருந்தொற்று நோயான கொரோனா  தடுப்பு பணிகளுக்காக தமது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து  ஒரு கோடி ரூபாயை தமிழக அரசிடம் இன்று வழங்கியுள்ளார். 

click me!