சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொந்த மாவட்டத்தில், மருந்துமாத்திரை வாங்க குவிந்த நோயாளிகளால் பரபரப்பு.!!

By Thiraviaraj RMFirst Published Mar 30, 2020, 4:36 PM IST
Highlights

புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வெளிநோயாளிகள் மருந்து வாங்குவதற்காக நீண்ட வரிசையில் கூட்டமாக நெருக்கமாக நிற்கிறார்கள். இதனால் சமூக இடைவெளி என்பது இல்லாமல் பொதுமக்கள் கொரோனா அச்சம் இல்லாமல் அதன் வீரியம்தெரியாமல் இப்படி கூடியிருக்கிறார்கள்.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மாவட்டத்தில் இப்படியொரு கொடுமை நடப்பதாக ட்விட்டரில் பொதுமக்கள் வீடியோ பதிவை பகிர்ந்திருக்கிறார்கள். 

T.Balamurukan

தமிழகத்தில் கொரோனா தாக்குதலின் கொடூரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.இதனால் அரசும் புதுப்புது உத்தரவுகளும் வெளிவந்து கொண்டிருக்கிறது.பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்களான காய்கறி, மீன்,ஆட்டு இறைச்சி மற்றும் மருந்து மாத்திரை வாங்க நோயாளிகள் முதியோர்கள், மாற்று திறனாளிகள் வெளியே செல்லும் போது சமூக இடைவெளி விட்டு நிற்க வேண்டும் என்று அரசும் ,சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அடிக்கடி டீவி.ட்விட்டரில் தோன்றி அறிவுரை வழங்கி வருகிறார்கள்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் மருந்து,மாத்திரைகள் வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சி!
இதில் மருந்தாளுநர் ஒருவர் மட்டுமே பணிபுரிவதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என பொதுமக்கள் புகார் pic.twitter.com/7LawADDU8R

— Stephen (@stevereports)

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொந்த மாவட்டமான புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வெளிநோயாளிகள் மருந்து வாங்குவதற்காக நீண்ட வரிசையில் கூட்டமாக நெருக்கமாக நிற்கிறார்கள். இதனால் சமூக இடைவெளி என்பது இல்லாமல் பொதுமக்கள் கொரோனா அச்சம் இல்லாமல் அதன் வீரியம்தெரியாமல் இப்படி கூடியிருக்கிறார்கள். அவர்களுக்கு மருந்து வழங்குவதற்கு அங்கு போதிய மருந்தாளுநர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த கூட்ட நெரிசல் இல்லாமல் மருந்தாளுநர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நேற்று வரை 50 பேருக்கு ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது புதிதாக 17 பேருக்கு தொற்று உறுதியாகி மொத்தம் 67 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஒருவர் மட்டும்தான் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்.

click me!