உளவுத்துறை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்... ஆடிப்போன விஜயபாஸ்கர்... அதிரடி உத்தரவு போட்ட எடப்பாடி..!

Published : Mar 30, 2020, 04:10 PM ISTUpdated : Mar 31, 2020, 10:23 AM IST
உளவுத்துறை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்... ஆடிப்போன விஜயபாஸ்கர்... அதிரடி உத்தரவு போட்ட எடப்பாடி..!

சுருக்கம்

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அடங்கவில்லை. எங்கிருந்து வந்தது? எப்படி கட்டுப்படுத்துவது?  என்கிற குழப்பத்தில் தவித்து வந்தார் விஜயபாஸ்கர். 

தமிழகத்தில் இதுவரை 67 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஒருவர் மரணமடைந்துள்ளார். இத்தனைக்கும் பிற மாநிலத்தை விட தமிழகத்தில் அனைத்து விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்து வருகின்றனர் அமைச்சர்கள். அதிலும் குறிப்பாக சுகாதாரத்துறை அமைச்சர் நேரடியாக களத்தில் குதித்து சோதனை போடுவது, செய்தியாளர்களை சந்திப்பது, சுகாதாரத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்துவது என இரவு பகல் பாராமல் பம்பரம் போல சுழன்று வந்தார்.

இருப்பினும் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அடங்கவில்லை. எங்கிருந்து வந்தது? எப்படி கட்டுப்படுத்துவது?  என்கிற குழப்பத்தில் தவித்து வந்தார் விஜயபாஸ்கர். அப்போது தான் வெளிநாடு செல்லாத ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. சிகிச்சை பெற்று வந்த அவர் சில தினங்களுக்கு முன் இறந்தார். அவரைப்பற்றிய விவரங்கள் திரட்டப்பட்டன. வெளிநாட்டில் இருந்து வந்த மதப்பிரச்சாரகர்கள் தமிழகம் வந்த போது அவர்களுக்கு உதவியாக இருந்தவர் என்பதும், அவர்களுடன் பல்வேறு இடங்களுக்கு சென்றதும் தெரிய வந்தது.

தமிழகத்தில் இனியும் கொரோனா தொற்றால் யாரும் இறக்கக்கூடாது எனத் திட்டமிட்டு இருந்த விஜயபாஸ்கருக்கு அடுத்து உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் அதிர்ச்சியை கிளப்பியது. அதாவது, ’’டெல்லியின் நிஜாமுதீனில் நடந்த தப்லிஹி ஜமாத் மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் 1500 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் மூலம் தான் அதிகமாக கோரோனா தமிழகத்தில் பரவுகிறது என உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் விஜயபாஸ்கரை வெளவெளக்கச் செய்துள்ளது. 

அடுத்து மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் லிஸ்ட் தயாரிக்கப்பட்டு அவர்களை அடையாளம் காணும் பணியை முடுக்கி விட்டார் விஜயபாஸ்கர். இந்தத் தகவல் எடப்பாடியாருக்கு தெரிவிக்கப்பட அந்தப்பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தச் சொல்லி இருக்கிறார். எப்போதும் பேட்டி கொடுத்து வந்த விஜயபாஸ்கர் இந்த இரண்டு நாட்களாக அமைதியாக இருந்து விட்டு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி கொடுக்கக் காரணம் இந்த விஷயம் மத ரீதியிலானதாக இருக்கிறது.

 ஆகையால், நடவடிக்கை எடுக்கும்போது அது அதிமுகவுக்கு சில தர்ம சங்கடங்களை ஏற்படுத்தலாம் என்பதால், இந்தப்பொறுப்பை அதிகாரிகளே கையாளட்டும் என எடப்பாடி அமைச்சர்களுக்கு உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.  

PREV
click me!

Recommended Stories

மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!
ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!