3 அடிக்கு குறைவாக யாராவது நெங்கி வந்தால் சிங்கப்பூர் போன்று 6 மாதம் ஜெயில்..!! டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

By Thiraviaraj RMFirst Published Mar 30, 2020, 3:55 PM IST
Highlights

தமிழகத்தில் கொரோனா தாக்குதலின் கொடூரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.இதனால் அரசும் புதுப்புது உத்தரவுகளும் வெளிவந்து கொண்டிருக்கிறது.சிங்கப்பூர் நாட்டில் இருக்கும் கடுமையான உத்தரவுகள் போன்று தமிழகத்திலும் கொண்டு வரவேண்டும் என்று ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார்.
 

T.balamurukan
தமிழகத்தில் கொரோனா தாக்குதலின் கொடூரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.இதனால் அரசும் புதுப்புது உத்தரவுகளும் வெளிவந்து கொண்டிருக்கிறது.சிங்கப்பூர் நாட்டில் இருக்கும் கடுமையான உத்தரவுகள் போன்று தமிழகத்திலும் கொண்டு வரவேண்டும் என்று ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நேற்று வரை 50 பேருக்கு ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது புதிதாக 17 பேருக்கு தொற்று உறுதியாகி மொத்தம் 67 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஒருவர் மட்டும்தான் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்.

சிங்கப்பூரில் 3 அடி இடைவெளிக்கும் குறைவாக எவரேனும் நெருங்கி வந்தால், அவரை கைது செய்து 6 மாதங்கள் வரை சிறையில் அடைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறதாம். இத்தகைய கடுமையான நடவடிக்கைகளின் மூலம் தான் அந்நாடு 3 உயிரிழப்புகளுடன் கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ளது.

— Dr S RAMADOSS (@drramadoss)

 

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் பெரும்பாலானவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்காமல் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் இன்னும் அவர்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது.
கொரோனாவை கட்டுப்படுத்த சமூக இடைவெளி முக்கியம் இருக்க வேண்டும் என்கிறது அரசு. என்ன தான் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கபப்ட்டாலும் ,நேற்று மதுரையில் மக்கள் விளக்குதூண்,தேர்மூட்டி பகுதிகளில் பொதுமக்கள் உணவு பொருள்கள் வாங்குவதற்கு சித்திரை திருவிழா போல் கூடியதை பார்த்த போலீஸ் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போய் நின்றார்கள். என்ன தான் கொரோனா கொடூரம் பற்றி மக்களுக்கு அரசு எடுத்துரைத்தாலும் மதுரை மக்கள் அடங்காமல் அப்படி நடந்து கொள்கிறார்கள்.

சிங்கப்பூரில் 3அடி இடைவெளிக்கு குறைவாக எவரேனும் நெருங்கி வந்தால் அவரை கைது செய்து 6மாதங்கள் வரை சிறையில் அடைக்க ஆனை பிறப்பிக்கப்பட்டிருக்கிறதாம்.இத்தகைய கடுமையான நடவடிக்கைகளின் மூலம் தான் அந்நாடு 3 உயிரிழப்புடன் கொரோனாவை கட்டுப்படுத்தியிருக்கிறது என்று பாமக கட்சி தலைவர் டாக்டர்.ராமதாஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


 

click me!