ஏப்ரல் 7 ஆம் தேதிக்குள் கொரோனா இல்லாத மாநிலமாக மாறும்...!! தெலுங்கான முதல்வர் அதிரடி..!!

By Ezhilarasan BabuFirst Published Mar 30, 2020, 3:07 PM IST
Highlights

வரும் ஏப்ரல் 7ஆம் தேதிக்குள் கொரோனா நோய்த் தொற்று  இல்லாத மாநிலமாக தெலுங்கானா மாநிலம் அறிவிக்கப்படும்  என அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார் .

வரும் ஏப்ரல் 7ஆம் தேதிக்குள் கொரோனா நோய்த் தொற்று  இல்லாத மாநிலமாக தெலுங்கானா மாநிலம் அறிவிக்கப்படும்  என அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார் .  இதுவரை தெலங்கானாவில் 58 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார் .  நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது .  சுமார் ஆயிரத்து  161 பேருக்கு கொரோனா  வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  சுமார் 25-க்கும் மேற்பட்டோர் இதற்கு உயிரிழந்துள்ளனர் .  இந்நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . அனைத்து மாநில அரசுகளும் கொரோனாவை  கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளன .   

இந்நிலையில்  தெலுங்கானா மாநில மாவட்ட அதிகாரிகளுடன் வீடியோ கான்பிரன்ஸிங்கில்  உரையாற்றிய அம்மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் செய்தியாளர்களை சந்தித்தார் ,  அப்போது பேசிய அவர் தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 25 ஆயிரத்து 935 பேர் ஏப்ரல் 7ஆம் தேதிக்குள் ( 14ம் நாட்கள்) தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை நிறைவு செய்கின்றனர் அதே நேரத்தில் இதுவரையில் யாருக்கும் புதிதாக நோய் தொற்று  ஏற்படவில்லை என்றார். அதேபோன்று  இனி யாருக்கும் நோய்த்தொற்று பரவக் கூடாது .  ஆகவே ஊரடங்கு உத்தரவை முழுவதுமாக மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.  அதே நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் அனைவரும்  படிப்படியாக  தனிமைப்படுத்துதலிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.  ஆகவே ஏப்ரல் 7ஆம் தேதிக்குள் அனைவரும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்களாக அறிவிக்கப்படுவர் என்றார்.

 

வெளிநாட்டிலிருந்து வந்தவர்களாலேயே வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே அவரது உறவினர்கள் மற்றும் அவர்களின்  நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும்  கண்டுபிடித்து தனிமைபடுத்தியுள்ளோம்.  வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 11 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.    அதேபோல் தெலுங்கானாவில் கொரோனா வைரசால் உயிரிழந்த அந்த ஒரு நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாதவர் ஆவார், மருத்துவமனைக்கு வருவதற்கு  முன்னதாகவே  இறந்துவிட்டார், உயிரிழந்த பின்னர் நடத்தப்பட்ட சோதனையில்தான்  அவருக்கு கொரோனா இருந்தது  உறுதி செய்யப்பட்டது .  எனவே தற்போது தெலுங்கானாவில் உள்ள மொத்தம்  58 பேரில்   76 வயதுடைய ஒரு நபரை தவிர மற்றவர்களுக்கு எந்த சிக்கலும் இல்லை .  அவர்கள் ஏப்ரல் முதல் வாரத்திற்குள் குணமடைந்து விடுவர்.  பின்னர் சிறிய பரிசோதனைக்குப் பின்னர் அவர்கள் அனைவரும் வெளியேற்றப்படுவர் என தெரிவித்தார் .  ஆனாலும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் சந்திரசேகர் ராவ் எச்சரித்தார் .

 

 

click me!