Horoscope: ஜோதிட சாஸ்திரத்தின் படி, குபேரன் யோகத்தால் எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட காற்று வீசப்போகிறது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, குபேரன் யோகத்தால் எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட காற்று வீசப்போகிறது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சியை உண்டாக்கும். எதிர்பார்த்த இடத்தில இருந்து நல்ல செய்தி வரும். புதியவரின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். பண வரவு உண்டாகும். இன்று நீங்கள் நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றி அடையும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உற்சாகம் தரும். செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்க இருக்கும் புதிய முடிவுகளுக்கு நல்ல வரவேற்பு காத்திருக்கிறது. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு பணி சுமை கூடும்.
மிதுனம்:
மிதுன ராசிகாரர்களுக்கு இன்று குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து சேரும். வெளிவட்டாரத்தில், யாரையும் விமர்சிக்க வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நன்மைகள் நடக்கும். பணப்புழக்கம் கையில் அதிகரிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் பெருகும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு உற்சாகமான நாளாகும். உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை பலப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசியினர் இன்று சொந்த முயற்சியால் முன்னேறுவீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்போது சந்திக்க நேரிடும். சுப செலவுகள் வரும். திடீர் பயணம் உண்டாகும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதக பலன் உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
கன்னி:
குடும்பத்தில் ஒற்றுமை காணப்படும். பண புழக்கம் கணிசமாக உயரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பயணங்களின் போது கவனம் தேவை. உடலில் ஆரோக்கியம் சீராகும். கணவன் -மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
துலாம்:
யாரையும் நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். வேலை சுமை இருந்து கொண்டே இருக்கும். குடும்பத்தில் பெரியவர்களை அனுசரித்து செல்லுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்கள் இடத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும்.
விருச்சகம்:
நெளிவு, சுளிவுகளை கற்று கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். தடைபட்ட திருமண காரியங்கள் விரைவில் நடக்கும். வீடு, மனை வாங்குவது குறித்து ஆலோசனை பண்ணுவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமைக்கு குறைவிருக்காது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகம் பொறுமை தேவை.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தொட்டதெல்லாம் ஜெயமாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் பல தடைகளை தாண்டி தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைவரும் ஏற்கும் படி இருக்கும்.
மகரம்:
உங்களை சுற்றி இருபவர்களின் சுய ரூபம் தெரிய வரும். நட்பு வழியில் நல்ல செய்தி வரும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீர்வுக்கு வரும். கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படும்.
கும்பம்:
திட்ட மிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில வரன் அமையும். வெளியூர் பயணங்கள் போகும் யோகம் உண்டாகும். கணவன் மனைவி உறவுக்கு இடையே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சாமர்த்தியம் தேவை.
மீனம்:
சகோதரர் வகையில் நன்மை உண்டாகும். பூர்விக சொத்து பிரச்சனை தீர்வு கிடைக்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். தாயாரின் உதவியும், ஆதரவும் கிடைக்கும்.கையில் பணப்புழக்கம் இருக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி அடைவீர்கள்.