உங்களுக்கு“MEDI CLAIM”இருக்கா? இதை படிங்க...

 
Published : Oct 23, 2017, 06:38 PM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
உங்களுக்கு“MEDI CLAIM”இருக்கா? இதை படிங்க...

சுருக்கம்

you have medi claim just read this

உங்களுக்கு“MEDI CLAIM”இருக்கா? இதை படிங்க...

யாருக்குமே எந்த நேரத்தில் எது நடக்கும் என தெரியாது....தினந்தோறும் அலுவலகம் செல்லும் போதோ அல்லது இயற்கையாகவே நம் உடலில் ஏற்படும் சில பல பிரச்சனை அல்லது நோய்வாய் படும் நேரத்தில் நமக்கு உறுதுணையாக இருப்பது தான் “இன்சூரன்ஸ்”..

அதுவும்“MEDI CLAIM”இன்சூரன்ஸ் எந்த அளவிற்கு முக்கியத்துவம்  வாய்ந்தது என்பதை பார்க்கலாம்.

முன்பெல்லாம் உடல்நலம் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யும் நிலைமைக்கு தள்ளப்படும் போது,நமக்கு ஏற்படும் மருத்துவ செலவை நம்மிடமிருந்து செலவிட்ட பின்பு தான், அதனை claim  செய்து அதற்கான  பணத்தை பெற முடியும் .

ஆனால் தற்போது புது வசதியாக  cashless  முறையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியும்.அதாவது,இதில்அரசு சார்ந்த பல இன்சூரன்ஸ் இருக்கிறது

உதாரணத்திற்கு, ஒரியன்டல் மெடிக்ளேம்” சொல்லலாம்.இதில பல வகையான schemes  உள்ளது

நாம்,தேர்வு செய்யும் திட்டம் மூலம் வருடத்திற்கு 10  ஆயிரம்  செலுத்தினாலே போதும்.அந்த வருடத்திற்குள் ஏதாவது நாம் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால்,ஐந்து லட்சம் ரூபாய் வரையில் சிகிச்சை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

தினந்தோறும் பல வற்றிற்கு தேவை இல்லாமல் வீண் செலவு  செய்கிறோம்,ஏதாவது பிரச்னை என்றால்,யாரிடமாவது பணத்தை கடனாக  பெற்று சிகிச்சை எடுத்துக்கொள்கிறோம்.

தக்க தருணத்தில்,நமக்கு பேருதவியாக இந்த இன்சூரன்ஸ் கண்டிப்பாக  உதவும் என்பதால், தேவைபடுபவர்கள் அரசு சார்ந்த இன்சூரன்ஸ்  திட்டத்தில் ஏதாவது ஒரு திட்டத்தை குடும்ப நலனுக்காக  எடுத்துக்கொள்ளலாம்.

தக்க தருணத்தில் உதவும்.....   

 

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்