"முருக பெருமானும் மூன்று மயில்களும்" - எதற்காக இந்த மயில்கள் தெரியுமா ?

 
Published : Oct 20, 2017, 06:15 PM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
"முருக பெருமானும்  மூன்று மயில்களும்" - எதற்காக இந்த  மயில்கள் தெரியுமா ?

சுருக்கம்

lord murugan and his 3 peacock

முருக பெருமானை  போற்றி புகழ்ந்து,வணங்கி வரும்  பக்தர்கள் இன்று முதல் ஆறு நாட்களுக்கு கந்த சஷ்டி சிறப்பு  விரதம்  இருக்க  மக்கள்  தொடங்கி  விட்டனர். 

இந்நிலையில் எப்படி விரதம் இருப்பது, ஆறு நாட்கள் என்னெவெல்லாம்  செய்ய  வேண்டும் என்பதை இதற்கு  முன்னதாக பார்த்தோம் 

முருக  பெருமானின்  ஆறுமுகங்களை  பற்றியும், ஒவ்வொரு முகமும்  எதனை  குறிக்கிறது, அதனுடைய  சிறப்பம்சங்கள்  என்ன  என்பதைஎல்லாம்  பார்த்தோம்.

ற்போது முருகனின்  வாகனமான மயில்  பற்றி பார்க்கலாம் 

முருகனுக்கு மூன்று மயில்கள் உண்டு.

மாங்கனி வேண்டி உலகைச் சுற்றி வர உதவிய மயில் மந்திர மயில்.
சூரசம்ஹாரத்தின்போது இந்திரன் மயிலாகி முருகனைத் தாங்கினான். இது தேவ மயில்.

பின் சூரனை இருகூறாக்கியதில் வந்த மயில்தான் அசுர மயில். ஆறுமுகமும் 12 கரங்களும் கொண்ட முருகனின் திருக்கோலத்தை சஷ்டி விழாவின்போது மட்டுமே திருச்செந்தூரில் முழுதாகத் தரிசிக்க  முடியும்.

மற்ற நாட்களில் அங்கவஸ்திரத்தால் மூடி விடுவார்கள். வியாசர் எழுதிய 18 புராணங் களில் ஸ்காந்தம் என்னும் கந்தபுராணமே மிகப்பெரியது. 
கந்தபுராணம்

ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்டது தான் கந்தபுராணம்..மற்ற எல்லா புராணங்களும் சேர்ந்தே மூன்று லட்சம் சுலோகங்கள்தான். கந்தன் பல பெயர்களால் போற்றப்படுகிறான்.
மொத்தத்தில்  சஷ்டியில் விரதமிருந்தால்,  சகல சௌபாக்கியம்  பெறுவோம் என்பதில்  பெருத்த நம்பிக்கை  உண்டு  பக்தர்களிடம்....

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்