கொரோனா நமக்கு வருமோ? மன பயத்தை போக்க சிறந்தது "யோகா"..! எப்படி சாத்தியம் ?

By ezhil mozhiFirst Published Apr 3, 2020, 1:28 PM IST
Highlights

"நம்மை நாமே" தனிமைப்படுத்திக்கொண்டு பாதுகாப்பது போல நம்முள் இருக்க கூடிய மன அழுத்தத்தைப் போக்க யோகா செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
 

கொரோனா நமக்கு வருமோ?  மன பயத்தை போக்க சிறந்தது யோகா..! எப்படி சாத்தியம் ?

21 நாள் ஊரடங்கு உத்தரவு இருக்கும் இந்த ஒரு தருணத்தில், நம்மவர்களுக்கு ஒருவிதமான மன அழுத்தம் ஏற்பட்டு இருக்கும். காரணம் தினந்தோறும் தொலைக்காட்சியில் மற்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும், இந்தியாவில் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் கொரோனா குறித்தும் வேதனை ஏற்பட்டு உள்ளது.

இந்த ஒரு தருணத்தில் தம்மை பாதுகாத்துக் கொள்வது மட்டுமல்லாமல், மற்ற பொருளாதார தேவைக்கு என்ன செய்வோம் எப்படி நாட்களைக் கடத்துவது என பல்வேறு கேள்விகளுடன் வீட்டில் சிந்திப்பவர்கள் அதிகம். அப்படிப்பட்டவர்களுக்கு சாதாரணமாகவே ஒரு விதமான மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது போன்ற ஒரு தருணத்தில் "நம்மை நாமே" தனிமைப்படுத்திக்கொண்டு பாதுகாப்பது போல நம்முள் இருக்க கூடிய மன அழுத்தத்தைப் போக்க யோகா செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடமாவது யோகா செய்வதற்கு நேரத்தை ஒதுக்கி பாருங்கள். கண்டிப்பாக வித்தியாசம் தெரியும். அதில் தினந்தோறும் செய்வதற்கு ஏதுவாக சாதாரண மூச்சுப்பயிற்சி (மெடிடேஷன்) மற்றும் சூரிய நமஸ்காரம்.. இவை இரண்டும் செய்து வந்தாலே உடல் ஆரோக்கியம் பெறும்.

மெடிடேஷன் செய்யும் போது நான்கு செகண்ட் நன்கு "மூச்சு உள் இழுத்து, 8 செகண்டில் வெளியிடுவதும் வேண்டும். இவ்வாறு குறைந்தது 10 முதல் 15 நிமிடங்கள் செய்யலாம். இதனால் நம் உடலில் ரத்த ஓட்டம் சீராகும். ஒருவிதமான புத்துணர்ச்சியும் கிடைக்கும். இது தவிர்த்து நம் உடலும் சிந்தனையும் ஒருசேர இருக்கும். எனவே மிக எளிதாக மன அழுத்தத்தில் இருந்து வெளிவரலாம்.

click me!