ரிசல்ட் வந்துவிட்டது! அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு "கொரோனா பரிசோதனை"!

By ezhil mozhiFirst Published Apr 3, 2020, 11:16 AM IST
Highlights

அமெரிக்காவில் மட்டும் இதுவரை இரண்டரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த ஒரு நிலையில் சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற சிலருக்கு, சில நாட்களுக்கு பின் கொரோனா இருப்பது செய்யப்பட்டு உள்ளது. 

ரிசல்ட் வந்துவிட்டது! அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு "கொரோனா பரிசோதனை"!  

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் அமெரிக்காவில் தொடர்ந்து அதிவேகமாக பரவி வருகிறது. மேலும் கலிபோர்னியா,நியூயார்க் உள்ளிட்ட இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் நோய் பாதித்தவர்கள் அனுமதிக்க கூட இடம் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது.

இந்த ஒரு நிலையில் அமெரிக்க ராணுவம் ஒரு லட்சம் பிளாஸ்டிக் பைகளுக்கு ஆர்டர் கொடுத்து உள்ளது அதன் மூலமே இறந்த சடலங்களை மூட முடியும் என்பது குறிப்பிடதக்கது. நிலைமை இப்படி இருக்கும்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அமெரிக்காவில் மட்டும் இதுவரை இரண்டரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த ஒரு நிலையில் சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற சிலருக்கு, சில நாட்களுக்கு பின் கொரோனா இருப்பது செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக டிரம்பிற்கு கொரோனா உள்ளதா என சொதனை செய்யப்பட்டத்தில் நெகட்டிவ் என வந்துவிட்டது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இரண்டாவது முறையாக நேற்று மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இரண்டாவது சோதனையிலும் டிரம்புக்கு கொரோனா வைரஸ் இல்லை என்றும் அவருக்கு நெகட்டிவ் வந்துள்ளது. இதனை அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையின் மருத்துவர் கான்லி உறுதி செய்துள்ளார். மேலும் அதிபர் டிரம்ப் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார் 

click me!