ஜென்மாஷ்டமியின் போது வழக்கமாக நடக்கும் பதார்த்தங்களுடன், இன்னும் ஆடம்பரமாக பல பலகாரங்களையும் அந்த பெண்மணி உருவாக்கியிருக்கிறார். லட்டு, பர்ஃபி, பேடா, ஜிலேபி என பல ருசியான பலகாரங்கள் கிருஷ்ணருக்குப் படைக்கப்பட்டுள்ளதைப் படத்தில் காணலாம்.
நாடு முழுவதும் செப்டம்பர் 7ஆம் தேதி ஜென்மாஷ்டமி கொண்டாடப்படுகிறது. பகவான் கிருஷ்ணரின் பிறந்த நாள் என்று அழைக்கப்படும் இந்த நாளை பக்தர்கள் மிகுந்த உற்சாகத்துடனும் உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள்.
மக்கள் தங்களுடைய கிருஷ்ணர் சிலைகளை குளிப்பாட்டி, அழகான புதிய ஆடைகளை அணிவித்து, குழந்தைப் பருவத்தில் தங்களுக்குப் பிடித்த சில அற்புதமான உணவுகளை பரிமாறுகிறார்கள். சிலர் கிருஷ்ண ஜென்மாஷ்டமி அன்று விரதம் கடைப்பிடித்து, கிருஷ்ண பகவான் பிறந்ததாகக் கூறப்படும் நள்ளிரவில் பூஜை செய்கிறார்கள்.
undefined
இந்நிலையில், மங்களூரை சேர்ந்த பெண் ஒருவர் ஜென்மாஷ்டமியை முன்னிட்டு முன் எப்போதும் இல்லாத வகையில் தனது பக்தியை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் கிருஷ்ணருக்காக 88 வகையான பலகாரங்களைத் தயாரித்துப் படைத்துள்ளார். அவர் தான் தயாரித்த பதார்த்தங்களுடன் இருக்கும் போட்டோ ட்விட்டரில் வைரலாகியுள்ளது.
வரலாறு காணாத வீழ்ச்சியில் இந்திய ரூபாய்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 83.22 ஆகச் சரிவு!
Proud of her and her devotion to lord Krishna. She is my patient. She has again broken her previous record. 88 dishes were prepared last night for Gokulashtami. pic.twitter.com/SDoh3JKTvM
— Dr P Kamath (@cardio73)டாக்டர் பி காமத் என்பவர் அந்தப் படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அவர் மங்களூருவைச் சேர்ந்த இருதயநோய் நிபுணரான அவர், தன்னிடம் சிகிச்சை பெறும் பெண்மணியின் படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்த பெண்மணி கிருஷ்ணர் மீது கொண்ட பக்தியை வெளிப்படுத்தும் வகையில், இந்த விருந்தை கவனமாக உருவாக்கி இருக்கிறார் என்று மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜென்மாஷ்டமியின் போது வழக்கமாக நடக்கும் பதார்த்தங்களுடன், இன்னும் ஆடம்பரமாக பல பலகாரங்களையும் அந்த பெண்மணி உருவாக்கியிருக்கிறார். லட்டு, பர்ஃபி, பேடா, ஜிலேபி என பல ருசியான பலகாரங்கள் கிருஷ்ணருக்குப் படைக்கப்பட்டுள்ளதைப் படத்தில் காணலாம்.
அவரையும், கிருஷ்ணர் மீது அவருக்கு இருக்கும் பக்தியை வியந்து பலரும் ட்விட்டரில் பதில் அளித்து வருகிறார்கள். "ஆஹா... இதுதான் தூய பக்தி. சர்வவல்லமையுள்ள கடவுள் மீது உள்ள மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தால் மட்டுமே இப்படிச் செய்ய முடியும்" என்று ஒரு பயனர் பாராட்டி இருக்கிறார். "ஒவ்வொரு வருடமும் இதே போன்ற பதிவை நான் எதிர்நோக்குகிறேன். இந்த பக்தி என்னை ஈர்க்கிறது" என்று மற்றொருவர் கூறியுள்ளார்.
எல்எல்ஏ, அமைச்சர்களுக்கு ரூ.40,000 சம்பள உயர்வு! மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு