மலேசியாவில் விஷத்தன்மை கொண்ட மீனை உட்கொண்ட மூதாட்டி உயிரிழ்ந்துவிட்டார். அவரது கணவர் கோமா நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
மலேசியாவில் 83 வயது மூதாட்டி ஒருவர் பஃபர் மீன் உணவைச் சாப்பிட்டு உயிரிழந்துவிட்டார். அதனைச் சாப்பிட்ட அவரது கணவர் கோமா நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த மார்ச் 25ஆம் தேதி மலேசியாவின் ஜோஹோரில் இந்தச் சம்பவம் நடந்ததாகவும் தனது தந்தை பஃபர் மீனை உள்ளூர் கடையில் வாங்கி வந்ததாகவும் தம்பதியரின் மகள் ஐ லீ கூறுகிறார். "என் பெற்றோர் பல ஆண்டுகளாக அதே மீன் வியாபாரியிடம் மீன் வாங்குகிறார்கள், எனவே என் தந்தை அதைப் பற்றி இருமுறை யோசிக்கவில்லை" என்று அவர் கூறுகிறார்.
தன் தந்தை உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் இவ்வளவு கொடிய மீனைப் பற்றித் தெரிந்தே வாங்கி வந்திருக்க மாட்டார் எனவும் லீ சொல்கிறார்.
ட்விட்டரை மெர்சலாக்கிய பிரியாணி சமோசா! எப்படி இருக்கு பாருங்க!
மதிய உணவிற்கு மீனை சுத்தம் செய்து சமைத்துச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, லீயின் தாய் லிம் சியூ குவானுக்கு உடல் நடுங்க ஆரம்பித்து மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. அவரது கணவருக்கும் ஒரு மணிநேரத்திற்குப் இதேபோன்ற அறிகுறிகள் ஏற்பட்டன. உடனே தம்பதியரின் மகன் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அன்று மாலையே லிம் சியூ இறந்துவிட்டார். ஐ லீயின் தந்தையும் இப்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் கோமா நிலையில் உள்ளார்.
பஃபர் மீனில் உள்ள நச்சுத்தன்மை நரம்பு மண்டலத்தைப் பாதிக்கக்கூடியது. அதன் விளைவாக இதய செயலிழப்பு, சுவாச பிரச்சினையும் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சம்பவம் நடந்த அன்று ஜோஹோர் மீன் சந்தையில் விற்கப்பட்ட அனைத்து மீன்களும் மாவட்ட சுகாதார அலுவலகத்தால் ஆய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டன.
4 வயதில் புத்தகம் எழுதி கின்னஸ் சாதனை படைத்த சிறுவனம்! 1000 பிரதிகளைத் தாட்டி விற்பனை