மணமேடையில் துப்பாக்கியுடன் போஸ்... திடீரென மணமகள் முகத்தில் வெடித்த துப்பாக்கி.. உடனே மணமகன் செய்த காரியம்..!

By Ma Riya  |  First Published Apr 1, 2023, 11:49 AM IST

மணமேடையில் துப்பாக்கியை வைத்து, போட்டோஷூட் செய்து கொண்டிருந்த மணமகளுக்கு நேர்ந்த விபரீதம் காண்போர் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. 


திருமணம், ஆணும் பெண்ணும் இணையும் புனித பந்தம். அந்த திருமணத்தை சிறப்பாக நடத்த இருவீட்டாரும் முயற்சி செய்கிறார்கள். அதற்காக சிறப்பு அலங்காரம், பாடல்கள், புத்தாடை, விருந்து என கோலாகலமாக ஏற்பாடுகளை செய்வார்கள். திருமண நாள் ஒவ்வொருவருக்கும் வாழ்வில் முக்கியமான நாள் என்பதால் எப்போதும் நினைவில் இருக்குமாறு புகைப்படங்களையும், வீடியோக்களையும் எடுக்கிறார்கள். தற்போது வித்தியாசமான கான்செப்டுகளில் திருமணத்தை நடத்தும் போக்கு அதிகரித்துள்ளது. 

இந்த சிறப்பு ஏற்பாடுகள் பெரும்பாலான சமயங்களில் மணமக்களையும், காண்போரையும் மகிழ்வித்தாலும் சில சமயங்களில் விபரீதம் நடந்துவிடுகிறது. மகாராஷ்டிராவில் நடந்த ஒரு திருமணத்திலும் இதே போன்ற சம்பவம் நடந்துள்ளது. திருமண நாளில் மணமகனும், மணமகளும் கைகளில் பளபளக்கும் துப்பாக்கியுடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அசம்பாவிதம் நடந்தது. 

Tap to resize

Latest Videos

undefined

வெடித்த துப்பாக்கி

அதிதி என்பவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ள வீடியோவில் பதிவாகியிருக்கும் இந்த சம்பவம் காண்போரை ஒரு கணம் திகைக்க வைக்கிறது. போஸ் கொடுக்கும்போது மணமகள் கையில் இருக்கும் துப்பாக்கி அவரது முகத்திற்கு நேராக வெடித்துவிட்டது. மொத்தம் 13 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், மணமகனும், மணமகளும் ஒரே மேடையில் போஸ் கொடுக்கிறார்கள். தம்பதியர் கையில் இருந்த துப்பாக்கிகளில் ஒன்று எதிர்பாராத விதமாக வெடித்து மணமகளின் முகத்தை தாக்கியது. இந்த சம்பவம் நடந்ததும் மணமகள் துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு மேடையில் இருந்து அலறியடித்து ஓடுகிறார். மணமகளைக் காப்பாற்ற மணமகனும், மற்றவர்களும் ஓடி சென்று சூழ்ந்து கொள்கின்றனர். திருமண நாளில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சமூக வலைதளத்தில் பரவும் இந்த வீடியோவுக்கு மக்களிடையே கலவையான விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. இந்த வீடியோ இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. 'இப்போதெல்லாம் ஏன் இப்படிச் செய்கிறார்கள். பெரும்பாலான மக்கள் திருமண நாளை ஒரு பார்டி மாதிரி நடத்துகிறார்கள். தங்கள் வாழ்க்கையின் சிறப்பான நாளை, புகைப்படம், மற்ற செயல்பாடுகளால் சில நேரம் கெடுத்துக்கொள்கிறார்கள்,' என ஒருவர் கருத்து தெரிவித்தார். 

வீண் விளம்பரம்

மற்றொருவர், 'வீடியோவை பார்த்து பயந்துவிட்டேன்' என தெரிவித்துள்ளார். இன்னொருவர், 'வைரலாகப் போவதற்காகத்தான் இப்படியெல்லாம் செய்கிறார்கள்' என்று காட்டமாக கருத்து கூறியுள்ளார். இன்னொருவர், 'மணப்பெண்ணின் நிலை என்ன ஆனது' என வருத்தமாக கேட்டிருக்கிறார். அந்த மணமகளின் நிலை குறித்த விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை. 

 

Idk what's wrong with people these days they are treating wedding days more like parties and this is how they ruin their perfect day. 🤷‍♀️ pic.twitter.com/5o626gUTxY

— Aditi. (@Sassy_Soul_)

இதையும் படிங்க: ஒருநாள் பங்குனி உத்திர விரதம் இருந்தால் இத்தனை பலன்களா! முருகன் அருளால் அரசு வேலை, பதவி உயர்வு கூட கிடைக்கும்

click me!