நம் மனதை எப்படி புரிந்து கொள்வது? புத்தர் கூறிய 5 நிலைகள்!!

By Ma RiyaFirst Published Mar 31, 2023, 7:03 PM IST
Highlights

மனதைக் கட்டுப்படுத்துவது அவசியம். ஏனென்றால் கலங்கிய மனம் நிம்மதியை இழக்கச் செய்யும். கௌதம புத்தரின் கதையின் மூலம் மனதை எப்படி அமைதிப்படுத்துவது என்பதை அறிந்து கொள்ளுங்கள். 

ஒருவன் தன் மனதில் ஓடும் கேள்விகளுக்கு விடை காணாவிட்டால், அவன் மனம் அமைதியின்றி இருக்கும். ஆனால் மனதை எப்படி கட்டுப்படுத்துவது, அதை எப்படி புரிந்துகொள்வது என்பது முக்கிய கேள்வி? இந்த குழப்பங்களை தீர்க்கும் வகையில் கௌதம புத்தர் மனதை அறியும் 5 நிலைகளை குறித்து சொல்லியிருக்கிறார். அதை இங்கு கதைகள் மூலமாக தெரிந்து கொள்வோம். 

புத்தரின் கதை

ஒருமுறை கௌதம புத்தரிடம் ஒருவர் சென்று, 'மனதைக் கட்டுப்படுத்துவதற்கான முதல் படி என்ன?' என கேட்டுள்ளார். அதற்கு மெல்லிய புன்னகையுடன் புத்தர் பதிலளித்துள்ளார். "உங்கள் மனதைப் புரிந்து கொள்வதற்கான முதல் படி, அது தரும் பேராசையின் பயனற்ற தன்மையைக் காண்பதுதான். ஏனெனில் மனம் ஒரு சார்புடையதாக இருக்கும்போது அது பலவிதமான பேராசைகளைத் தருகிறது, மனத்தால் கொடுக்கப்பட்ட இந்தப் பேராசைகளை அடையாளம் கண்டுகொள்பவன் மனதைப் புரிந்து கொண்டான் என்று அர்த்தம்"என்றார் புத்தர். 

அப்போது அந்த நபர் புத்தரிடம்,"ஆனால், நம் மனம் நம்மைத் தூண்டுகிறது என்பதையும் பேராசை பயனற்றது என்பதையும் நாம் எப்படி அறிவது?" என மீண்டும் குழப்பத்துடன் கேட்டுள்ளார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக புத்தர் ஒற்றை வார்த்தை சொல்லியிருக்கிறா - அனுபவத்தால்- 

முதல் நிலை 

எதையும் அனுபவிக்காமல் அதை நிராகரிக்கவோ, புரிந்து கொள்ளவோ முடியாது. ஆசையை துறக்க முதலில் ஆசையை அறிந்து கொள்ள வேண்டும். ஒரு மனிதன் தனது மனதின் பேராசையால் பெறுவது அனைத்தும் இழக்கவும் நேரிடும் என்பதை அனுபவத்தால் அறிந்து கொள்ள வேண்டும். போதை என்பது துன்பம் மட்டுமே என்ற உண்மை கண்டு கொள்ளும் ஒருவர், போதையிலிருந்து விடுபடத் தொடங்குகிறார். பொறாமை தன்னை அழிக்கிறது என்பதை உணர்ந்தவன் பொறாமையிலிருந்து விடுபடுகிறான். மனதைப் புரிந்து கொள்வதற்கான முதல் படி இது. 

இரண்டாம் நிலை 

புத்தரிடம் அந்த நபர் மீண்டும் கேட்கிறார், "ஒருவர் மனதின் சோதனைகளால் அவதிப்படுவதை முதல் நிலையிலேயே அறிந்தால், இரண்டாவது நிலை என்ன?". அதற்கு

  • புத்தர் கூறுகிறார் - 'தேடிச் செல்லுங்கள்'. 

'இரண்டாவது நிலை, தனது மனம் அறிந்த மற்றும் அதிலிருந்து ஏற்கனவே விடுபட்ட நபரைக் கண்டுபிடிப்பது. ஏனெனில் அவனால் மட்டுமே உங்களுக்கு வழிகாட்ட முடியும்.'

மூன்றாம் நிலை 

அந்த நபர், ''ஆனால் அப்படிப்பட்டவரை எப்படி அடையாளம் காண்பது?''

இப்படியாக புத்தர் கூறுகிறார் - 'இது மூன்றாவது நிலை. ஒருவரின் மனதைப் புரிந்து கொள்வதற்கான மூன்றாவது நிலை 'கேட்பது'. ஒருவர் மிகவும் அமைதியான, அழகான மனிதர். ஆனால் அவர் மனதில் என்ன இருக்கிறது என்பது அவரது வார்த்தைகளால் மட்டுமே தெரியும். ஆனால், உங்கள் மனசாட்சியின் சோதனையில் தேர்ச்சி பெறும் வரை யாருடைய வார்த்தைகளையும் நம்பாதீர்கள்.' என்கிறார். 

நான்காவது நிலை 

மனதைப் புரிந்துகொள்ளும் நான்காவது நிலை 'கர்மா' என்கிறார் புத்தர். தன்னை அறிய சரியான திசையில் செயல்படுவது அவசியம். எப்படி? ஒவ்வொரு முறையும் ஒரு நபர் தனது வேலையைச் செய்யும்போது அவர் இரண்டு தவறுகளைச் செய்கிறார். முதல் தவறு - ஒருபோதும் அவர் வேலையை தொடங்குவதில்லை. ஒவ்வொரு முறையும் நாளை, நாளை என வேலை செய்வது போல பாசாங்கு செய்கிறார், இரண்டாவது தவறு - சரியான வழியில் செல்லாது. இந்த இரண்டு தவறுகளுக்கும் பின்னால் நமது 'மனதின்' தந்திரம் இருக்கிறது. அதனால்தான் ஒரு நபர் தனது வேலையைச் செய்ய முடியாமல் தவிக்கிறார். எல்லாவற்றையும் நாளை என்று ஒத்தி வைப்பவரின் மனதில் தோல்வி பயம் இருக்கிறது. இதற்கு விழிப்புணர்வு இல்லாததே முக்கிய காரணம். இது இல்லாமல், ஒரு நபரை சரியான திசையில் நடக்க மனம் அனுமதிக்காது என்கிறார் புத்தர். 

இதையும் படிங்க: ice water: வெயிலில் அடிக்கடி ஐஸ் வாட்டர் குடிக்கும் ஆளா நீங்கள்.. அதனால் வரும் பாதிப்புகள் தெரியுமா?

ஐந்தாவது நிலை 

மனதை அறிந்து புரிந்து கொள்ளும் ஐந்தாவது நிலை 'அறிவு' என புத்தர் கூறுகிறார். ஒவ்வொரு வேலையையும் விழிப்புணர்வுடன் செய்யுங்கள். அறியாமல் செய்யும் செயல் மரணம் போன்றது. 

  • ஒரு நபர் புத்தரிடம் கேட்கிறார் - 'ஒருவரின் விழிப்புணர்வை எவ்வாறு அதிகரிக்க முடியும்?'
  • புத்தர் இதற்கு 'தியானத்தின் மூலம்' என பதில் சொல்கிறார்.

'தியானம் என்பது மனதை அறிவதற்கும், புரிந்து கொள்வதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் கடைசிப் படியாகும். மனம் எனும் நதியைக் கடக்கக்கூடிய ஒரே படகு தியானம்தான். இந்த 5 நிலைகள் மூலம் தியானத்தை அறிந்த ஒருவன் தன் மனதை அறிந்து கொள்கிறான். மனதின் கவலைகளை போக்க, எல்லா செயலிலும் வெற்றி காண இந்த விஷயங்களை புரிந்து நடந்து கொள்ளுங்கள். 

இதையும் படிங்க: ramadan 2023: ரம்ஜான் நோன்பு நோற்கும் நீரிழிவு நோயாளிகள்.. இந்த 4 விஷயங்களை மறக்காதீங்க..!

click me!